மதுரை, டிச.17- மாற்றுத்திறனாளிகளுக்கு உத வித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், கடும் ஊனமுடையவர்க ளுக்கு ரூ.5ஆயிரம் வழங்க வேண்டும், குறைந்த ஊனமுடையோ ருக்கு ரூ.3 ஆயிரம் மாதம் உதவித் தொகையினை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி மதுரை பேரையூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடை பெற்றது. போராட்டத்திற்கு மாநிலச் செயலாளர் பி.முத்துகாந்தாரி தலைமை வகித்தார். புறநகர் மாவட்டச் செயலாளர் வி.முருகன், சேடபட்டி ஒன்றியச் செயலாளர் ஆர்.மகா லிங்கம், டி.கல்லுப்பட்டி ஒன்றியச் செயலாளர் ஆர்.திருக்கராஜ் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். யா.நரசிங்கத்தில் உள்ள மதுரை கிழக்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தி ற்கு மாவட்டப் பொருளாளர் ஐ.சுப்ப ரமணி தலைமை வகித்தார். மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிழக்கு தாலுகாச் செயலாளர் எம்.கலைச் செல்வன் ஆதரித்து பேசினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் துணைச் செயலாளர் பி.தனசேகரன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தி ற்கு சங்கத்தின் அலங்காநல்லூர் ஒன்றியச் செயலாளர் கே.தவமணி தலைமை வகித்தார். ஒன்றியத் தலை வர் பி.கோபாலகிருஷ்ணன், ஒன்றியத் துணைத் தலைவர் திருநாவுகரசு ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வாடிப்பட்டி ஒன்றியச் செய லாளர் ஏ.வேல்பாண்டி ஆதரித்துப் பேசினார்.
இராமநாதபுரம்
இராமநாதபுரம் மாவட்டத்தில் 5 இடங்களில் மறியல் நடைபெற்றது. இராமேஸ்வரத்தில் சீனிவாசன் தலைமையிலும், இராமநாதபுரத்தில் அரிகரசுதன் தலைமையிலும், கட லாடியில் கல்யாணசுந்தரம் தலைமை யிலும், முதுகுளத்தூரில் முனியசாமி தலைமையிலும், கமுதியில் ஸ்டாலின் தலைமையிலும் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 227 பேர் கலந்து கொண்டனர். போராட்டத்தை ஆதரித்து வெகு ஜன சங்கங்களின் தலைவர்கள் பேசினர். போராட்ட களத்திற்கே வந்து வட்டாட்சியர்கள் குறைகளை நேரில் கேட்டு அரசுக்கு பரிந்துரைப்பதாக உறுதி அளித்தனர்.