மதுரை, ஜூலை 8- மதுரை அரசு போக்குவரத்துக் கழகம் எல்லீஸ் நகர் பணிமனையில் எம். சுரேஷ் பாபு என்ற நடத்துநர் 12 ஆண்டுகளாக பணி புரிந்து வருகிறார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு சிறு விபத்து காரண மாக இவருக்கு காலில் அறுவை சிகிச் சைக்கு செய்யப்பட்டது. தொடர் மருத்துவ சிகிச்சைக்கு பின் பணியில் சேர்ந்தார். இந்நிலையில் மருத்துவ பரிசோத னைக்கு செல்ல வேண்டும். எனக்கு விடுப்பு வேண்டும் என கடந்த ஒரு மாத காலமாக கேட்டுக் கொண்டிருந்தார் . சனிக்கிழமை யன்று காலை பணிக்கு வந்த பொழுது போக்குவரத்து மேற்பார்வையாளரிடம் விடுப்பு கேட்டுள்ளார். அதிகாரி விடுப்பு தர மறுத்ததால் மன அழுத்தத்திற்கு உள் ளாகி இரத்த அழுத்தம் அதிகமாகி சுய நினைவு இல்லாமல் மயக்கமுற்றார். பின் அங்கிருந்த தொழிலாளர்கள் 108 ஆம்பு லன்சை வரவைத்து அரசு ராஜாஜி மருத்துவ மனையில் சேர்த்தனர். நான்கு மணி நேரத் திற்கு பிறகு அவருக்கு சுயநினைவு திரும்பி யுள்ளது. ஆரம்பகட்ட சிகிச்சைகள் நடை பெற்று வருகின்றன. போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் அரசு நடத்துநருக்கு விடுப்பு தர மறுத்த அரசு போக்குவரத்து கழக நிர்வாகத்தை கண்டித்து அரசு போக்குவரத்து மதுரை தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் சனிக்கிழமையன்று எல்லீஸ் நகர் பணி மனை கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கிளை தலைவர் கே. குமார் தலைமை வகித்தார். கிளை செயலாளர் டி. சிவக்குமார், மத்திய சங்க துணை செயலா ளர் கே.சுதாகரன் ஆகியோர் கண்டன உரை யாற்றினர்.