நாகர்கோவில், டிச. 7- கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில்களில் காலியாக உள்ள 113 டிபிஎப் காவலர் பணி யிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க புத னன்று (டிச.8) கடைசி நாளா கும். இதுகுறித்து மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில்களில் சிறப்பு கோவில் பாதுகாப்பு காவலர் பணிக்கு (டிபிஎப்) மொத்தம் 113 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலியிடங்களை நிரப்புவதற்கு விருப்பமுள்ள 62 வயதுக்குட்பட்ட ஓய்வு பெற்ற காவலர்கள் மற்றும் ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களிடமிருந்து வேலை கோரும் மனுக்கள் வரவேற்கப்படுகின்றன. ஓய்வு பெற்ற காவலர்கள் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தி லும் ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் துணை இயக்குநர், முன்னாள் படைவீரர்கள் நலன், நாகர்கோவில் வழியாகவும் மனுக்களை 8.12.2021 க்கு முன்னர் சம்பந்தப்பட்ட அலு வலகங்களில் கிடைக்கும் படியாக அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்த பணியில் சேருபவர்க ளுக்கு மாத ஊதியம் ரூ.7,500/- வழங்கப்படும். காலியிடங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது. பணியிடங்கள் கோட்டார்-7, வடசேரி-8, ஆசாரிபள்ளம்-1, ஆரல்வாய்மொழி-11, பூத பாண்டி-14, கன்னியாகுமரி-5, தென்தாமரைகுளம்-2, சுசீந்தி ரம்-17, அஞ்சுகிராமம்-2, தக்கலை-14, மார்த்தாண்டம்-3, கொற்றிகோடு-4, குலசேகரம்- 2, திருவட்டார்-3, அருமனை-2, களி யக்காவிளை-1, குளச்சல்-1, இரணியல்-6, மணவாள குறிச்சி-2, வெள்ளிசந்தை-1, மண்டைக்காடு-4, கருங்கல்-2, நித்திரவிளை-1, மொத்தம்-113 காலிப்பணியிடங்கள் இடங்கள் உள்ளதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.