சிவகங்கை ஜூன் 15- சிவகங்கை மாவட்டம் இளை யான்குடி பேரூராட்சி யில் மக்களின் குடி தண்ணீர் பிரச்ச னைக்கு தீர்வுகாண ரூ28 கோடியில் திட் டம் செயல்படுத்த உள் ளதாக பேரூராட்சி மன்றத் தலைவர் நஷ்முதீன் செய்தியாள ரிடம் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: இளை யான்குடி பேரூராட்சியில் 30ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இங்கு குடிதண்ணீர் பெரும் பிரச்சனையாக இருந்தது. முன்னாள் முதல்வர் கலைஞர் ஆட்சியில் காவேரி கூட்டுக் குடிநீர் திட்டம் உருவானது. இந்த தண்ணீர் போதுமானதாக இல்லை. இத னால் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் தமிழக முதல்வர் கவ னத்திற்கு கொண்டு சென்றார். அம்ருத் திட்டம் 2,0 அனுமதி அளித்து ரூ.28 கோடியில் பரமக்குடி வைகை ஆற்றிலிருந்து செயல் படுத்த உள்ளனர். வைகை ஆற்றில் 6 உறை கிணறுகள் உருவாக உள்ளது. 15 கிமீ தூரத்தி லிருந்து தண்ணீர் கொண்டு வரப்பட உள்ளது. ஐந்து மேல் நிலைத்தண்ணீர் தொட்டி அமைத்து குடிதண்ணீர் 3600 பொதுக்குழாய் கள் அமைத்து குடிதண்ணீர் வழங்கப்பட உள்ளன.இளையான்குடி நகரில் நான்கு இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலை யம் அமைக்கப்பட உள்ளன.கழிவுநீரை சுத்தி கரிப்பு செய்து தண்ணீரை பயன்படுத்தும் திட்டம் உள்ளது. ஒரு நாளைக்கு 4 லட்சம் லிட்டர் தண்ணீரை மரம் வளர்க்க,ஊரணிக்கு கொண்டு செல்ல உள்ளோம்.ஊரணியில் தண்ணீர் நிரப்புவதால் ஆழ்குழாய் கிணறு களில் நீர்ஆதாரம் பெருகும் என்றார். பேட்டியின்போது செயல்அலுவலர் இரா. கோபிநாத் உடனிருந்தார்.