districts

img

தோள் சீலையை அகற்றச் சொன்னவர்கள் இப்போது ஆடையை அகற்றுகிறார்கள்

திண்டுக்கல், ஜூலை 24- தோள் சீலையை அகற்றச்  சொன்னவர்கள் இன்றைக்கு  ஹிஜாப்பை அகற்றச்சொல்கிறார் கள், மணிப்பூரில் பெண்களின் ஆடைகளை அகற்றுகிறார்கள் என்று பாலபிரஜாபதி அடிகள்  தனது வேதனையை வெளிப் படுத்தினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்கம் சார்பாக பழனியில் பண்பாட்டுக்கருத்த ரங்கம் நடைபெற்றது. இக்கருத்த ரங்கில் பால பிரஜாபதி அடிகளார்  கலந்து கொண்டு சிறப்புரையாற்றி னார்.  அவர் பேசியதாவது:- ஒரு கல்லில் கடவுளைக் காண  முடியும் என்றால் அதை சக மனிதனி டம் காண முடியாதா? உன்னில் இல்  லாத இறைவன் இந்த உலகில்  இல்லை என்றார் வைகுந்தசாமி. நாங்கள் எங்களுக்குள்ளேயே தெய்வத்தைத் தேடுகிறோம். எல்லா கோவில்களிலும் காணிக்கை தான் பெரியதாக இருக்கிறது. காணிக்கை இடாதீர்கள், கைக்கூலி வாங்காதீர்கள் என்பது அய்யாவின்  வார்த்தை. ஆயிரம் அய்யாவழி கோவில்களுக்கு நான் அடிக்கல் நாட்டி திறந்து வைத்திருக்கிறேன்.

அந்த ஆலயங்களில் எல்லாம் கண்  ணாடி தான் உள்ளே இருக்கும். தமி ழில் தான் வழிபாடு.  அரசாங்கத்தை கோவிலை விட்டு வெளியே போ என்கிறார்கள்.  அப்படியென்றால் யார் உள்ளே வருவார்கள்? யாருடைய சொத்து  இந்த பழனி முருகன் கோவில். பழனி சித்தர்கள் வாழ்ந்த பூமி  சிவபூமி. தமிழ்மொழியை பாடிய வர்கள் சித்தர்கள். இந்த முருகன் சிலையை உருவாக்கியவர்  போகர். போகருக்கு வடமொழி தெரியுமா? சமஸ்கிருதம் தெரி யுமா? போகர் மொழி தமிழ். அவரது மொழியில் அல்லவா அர்ச்சனை, ஆராதனை செய்ய வேண்டும். நமது உரிமையைக் கேட்க வேண்டும் எல்லா துறையிலும் தொழிற்சங்  கம் இருக்கிறது. கோவிலில் தொழிற்சங்கம் இல்லை. என்  றைக்கு கோவிலுக்குள் செங்கொடி  தொழிற்சங்கம் அமைக்கிறீர்களோ அந்நாள் தான் தமிழகத்தின் பொற் காலம்.  தொழிற்சங்கம் நடத்தத் தெரிந்த செங்கொடி சங்கம் கோவி லுக்குள் செல்ல வேண்டும். அப்ப டிச் செல்லும் போது அவர்கள் வெளியேறிவிடுவார்கள். கோவில்  வழிபாடு நடத்துவதற்கு மட்டு மல்ல. கோவில் சார்ந்த குடிகளின் உடமையும், ;உரிமையும் அங்கே இருக்கிறது. 

ஆடை இல்லாதவன் அரை மனிதன் என்ற காலம் போய் நாகரீக  காலம் வந்துவிட்ட காலத்தில் ஆடையை அகற்றும் கூட்டம்  ஒன்று அலைந்து கொண்டிருக்கி றது. இந்தச் செயலைச் செய்கிற வனை நேர்மையானவன் என்று சொல்ல முடியுமா? இவர்களை எந்த வகையில் ஏற்றுக்கொள்வது. தோள் சீலையை அகற்றச் சொன் னவர்கள் தலைச்சீலையை அகற்  றச் சொன்னவர்கள், இப்போது இஸ்லாமிய பெண்கள் அணியும்  ஹிஜாப்பை அகற்றச் சொல்கிறார் கள்.  மண்டைக்காட்டில் கலவரம் நடந்தது. பல உயிர்கள் பலியாக் கப்பட்டன. அந்த கலவரத்தை முடி வுக்குக் கொண்டு வர நாங்கள் போராடினோம். தவத்திரு குன்றக் குடி அடிகளார், சுயமரியாதை இயக்கம், பொது உடமை இயக்க மும் எங்களுடன் வந்து வீடு வீடாகச்  சென்று அந்த கலவரத்தை முடி வுக்கு கொண்டு வந்தன.  மீண்டும் ஒரு கலவரத்தை மூட்டி  வரக்கூடிய தேர்தலில் வெற்றி  பெற்று விடலாம் என்று நினைக்கி றார்கள். இந்தியா முழுவதற்கும்  மத நல்லிணக்கம் பாதுகாப்ப தற்காக நான் வருகிறேன். நீங்க ளும் வாருங்கள். மணிப்பூருக்குச் செல்வோம்.

அவர்கள் இந்த நாட்  டின் குடிகள் அல்லவா. உங்க ளுக்குள் சாதி துவேசம் இருக்கக்  கூடாது. நாம் மனித நேயமிக்க வர்களாக இருக்க வேண்டும்.  பிறந்தவர்கள் எல்லாம் இறப்பார்கள் என்பது பகுத்தறிவு. நாய்கடித்தும் சாகலாம், முள் குத்தி யும் சாகலாம். சர்க்கரை நோய்  வந்தும் சாகலாம். என்னை கொல்வ தானால் கொல். பொதுவுடமைத் தோழர்கள் எனக்குப் பாதுகாப்பு தந்திருக்கிறார்கள். மத நல்லி ணக்கத்திற்காகவும் மனி மாண்புக்  காகவும் தொடர்ந்து போராடுவோம் என்றார். இந் நிகழ்விற்கு கிளைச்செய லாளர் கா.பழனிக்குமார் தலைமை வகித்தார். கவிஞர் சோ.முத்து மாணிக்கம், பேரா.சோ.மோகனா, வழக்கறிஞர் சு.பால்சாமி, க.பாலன் (சிஐடியு) ஆகியோர் முன்னிலை  வகித்தனர். என்.சின்னச்சாமி வர வேற்றார். மாவட்ட நிர்வாகிகள் வரத.ராஜமாணிக்கம், கவி வாணன், தாமோதரன், மாநி லக்குழு உறுப்பினர் இரா.ராசேந்தி ரன், தனபால், கமலக்கண்ணன், தேவதாஸ், பேராசிரியர்கள் குளத்தூரான், சேதுராமலிங்கம், கவிஞர்கள் ராஜன், ஆறுமுகம், இளங்கோ உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். முன்னதாக சமரம்  கலைக்குழுவின் கலைநிகழ்ச்சி கள் நடைபெற்றன.