districts

img

தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் குடியிருப்பில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

தேனி ,செப்.13- திருவள்ளூர் மாவட்டத்தில் வேல்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கப்பட்ட விவகாரத்தில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன் குடியிருப்பில் லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல்துறையினர் செப் டம்பர் 13 செவ்வாயன்று சோதனை மேற்கொண்டனர் .. திருவள்ளூர் மாவட்டத்தில் செயல் படும் வேல்ஸ்  மருத்துவக் கல்லூரி க்கு கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அனுமதி வழங்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்று இருப்பதாக அரசுக்கு வந்த புகாரை தொடர்ந்து, தமிழக முன் னாள் சுகாதாரத்துறை அமைச்சர்  விஜய பாஸ்கருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் செவ்வா யன்று சோதனை நடத்தினர். அந்த  கல்லூரியை ஆய்வு நடத்தி அனுமதி வழங்க நியமிக்கப்பட்ட நால்வர் குழு வில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜி நாதன் இருந்தார். இதையடுத்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனை முதல்வரின் குடியிருப்பு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது.  தேனி லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் கண்காணிப்பாளர் சுந்தர ராஜ்,  ஆய்வாளர்  ஜெயப்பிரியா தலை மையிலான 8 அதிகாரிகள் சோதனை நடத்தினர். முதலில் மருத்துவமனை முதல்வர் வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள், பின்னர் அவரை வாக னத்தில் அழைத்துக் கொண்டு அலுவல கத்திற்கு வந்தனர். அங்குள்ள முதல்வர் அலுவலக அறைக்குள் இருந்து ஆவ ணங்களை  சோதனை செய்தனர். அதன் பின்னர் மீண்டும் முதல்வரை அழை த்துக்கொண்டு அவரது குடியிருப்பிற்கு சென்று அங்கு சோதனை நடத்தி முதல்வரிடம் பல்வேறு கேள்விகள் கேட்டு விசாரணை நடத்தினர். காலை 7 மணிக்கு தொடங்கி சோதனை பிற் பகல் சுமார் 3 மணியளவில் நிறை வுற்றது. சோதனையை முடித்துக் ்கொண்டு லஞ்ச ஒழிப்புத்துறை அதி காரிகள் திரும்பிச் சென்றார்.

கல்லூரி முதல்வர் பேட்டி 

இது குறித்து முதல்வர் பாலாஜி நாதன் செய்தியாளர்களிடம் கூறுகை யில், ஏறக்குறைய 8 மணி நேரம் நடை பெற்ற இந்த சோதனையில் எந்தவித ஆவணங்களும், ஆதாரங்களும் கைப் பற்றப்படவில்லை. அதனை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளே தன்னிடம் எழுத்துப்பூர்வமாக அளித் துள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், புதிதாக துவங்க இருந்த  வேல்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையை ஆய்வு செய்வதற்காக தமிழக அரசால் கடந்த 2021ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட குழுவில் நான் உட்பட 4 மருத்துவர்கள் இடம்பெற்றி ருந்தோம். அப்போது அந்த மருத்துவ மனையில் இருந்த குறைபாடுகள் எல்லாம் அரசுக்கு சுட்டிக்காட்டித்தான் சான்றளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழகம் மற்றும் தேசிய மருத்துவ ஆணையம் ஆகிய வற்றின் அனுமதி பெற்று தற்போது அக்கல்லூரி இயங்கி வருவதாக கூறினார்.
 

;