districts

img

வரைவு வாக்காளர் பட்டியல்: தேனி ஆட்சியர் வெளியிட்டார்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்குச் சாவடி பட்டியலை வெளியிட்டு அவர் பேசுகையில், ‘‘மக்க ளவை தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தேனி மாவட்டத்தில் வாக்குச் சாவடிகள் பகுப்பாய்வு  செய்யப்பட்டன.  இதில், ஆண்டிபட்டி சட்டப் பேரவை தொகுதியில் உள்ள 316 வாக்குச் சாவடிகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பெரியகுளம் (தனி) சட்டப் பேரவை தொகுதியில் உள்ள 297 வாக்குச் சாவடிகளில் 7 வாக்குச் சாவடிகள் அமைவிடம் மற்றும்  கட்டட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2 வாக்குச் சாவடிகள் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. போடி சட்டப் பேரவை தொகுதியில் உள்ள 315 வாக்குச் சாவடிகளில், 18 வாக்குச் சாவடிகள் அமைவிடம் மற்றும் கட்டட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 28 வாக்குச் சாவடிகள் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரைவு வாக்குச் சாவடி பட்டியல் கோட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் உள்ள தகவல் பலகையில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. வரைவு வாக்குச் சாவடிகள் குறித்த ஆட்சேபணை மற்றும் திருத்தங்கள் குறித்து வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், மாவட்ட  தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோரிடம் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆக.30 ஆம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம். இறுதி வாக்குச் சாவடி பட்டியல் ஆக.31 ஆம் தேதி வெளியிடப்படும் என்றார்.