districts

img

திண்டுக்கல்லில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம்

திண்டுக்கல். ஜுலைi.4 திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் தீக்கதிர் சந்தா சேகரிப்பு இயக்கம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  திண்டுக்கல் ஒன்றியப்பகுதியில் நடைபெற்ற சந்தா சேகரிப்பு இயக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம் கலந்து கொண்டு சந்தா சேகரித்தார்.  இந்நிகழ்ச்சியில் தீக்கதிர் முதன்மை பொது மேலாளர் என். பாண்டி. ஒன்றியச்செயலாளர் சரத்குமார், மாவட்டக்குழு உறுப்பினர் தா.அஜாய்கோஷ், ஒன்றியக்குழு உறுப்பினர் ஆசைத்தம்பி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 30க்கும் மேற்பட்ட சந்தாக்கள் பெறப்பட்டன.  திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் நடைபெற்ற சந்தா சேகரிப்பு இயக்கத்தில் தீக்கதிர் முதன்மை பொதுமேலாளர் என்.பாண்டி கலந்து கொண்டார். நகரச்செயலாளர் ஏ.அரபுமுகமது, மாவட்டக்குழு உறுப்பினர் பி.ஆஸாத், மாமன்ற உறுப்பினர்கள் கே.எஸ்.கணேசன், எஸ்.ஜோதிபாசு, நகர்க்குழு உறுப்பினர் விஷ்ணுவர்த்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் 36 சந்தாக்கள் பெறப்பட்டன. ஆட்டோ தொழிலாளர்கள், சிறு தொழில் அதிபர்கள், விவசாயிகள், சாலையோர வியாபாரிகள் என பலர் தீக்கதிர் நாளிதழுக்கு சந்தா வழங்கி வருகிறார்கள். (நநி)