தேனி, ஜூலை 3- கூடலூர் அருகே தமிழக வனப்பகுதியில் நீதிமன்ற உத்தரவுப்படி விவசாயம் செய்ய அனுமதி வழங்கக் கோரி விவசாயிகள் இரண் டாம் நாளாக டென்ட் அமைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கம்பம் மேற்கு வனச்சர கத்திற்குட்பட்ட தமிழக வனப்பகுதியான ஆசாரி பள்ளம் பகுதியில் கூடலூர் பகுதியைச் சேர்ந்த சிலர் தலைமுறை தலைமுறை யாக விவசாயம் செய்து வந் துள்ளனர். கடந்த 1993-ஆண்டு வனப்பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டபோது இங்கு விவசாயம் செய்த ஏராள மான விவசாயிகள் வெளி யேற்றப்பட்டனர். இதில் சிலர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இதில் 18 குடும்பங்களுக்குச் சாதக மாக உத்தரவு வந்துள்ளதா கக்கூறி, தங்கள் நிலத்தை ஒப்படைக்க வேண்டுமெ னப் பெண்கள் உட்பட சுமார் இருபது பேர் வனப்பகுதி யில் ஞாயிறன்று டென்ட் அமைத்துக் குடியேறினர். வனத்துறையினர் அவர்களி டம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இந்த நிலையில் போராட்டம் நடத் தும் விவசாயிகளின் வழக்க றிஞர்களுடன் வனத்துறை உயரதிகாரிகள் திங்க ளன்று தேனியில் நடத்திய பேச்சுவார்த்தை முடிவுக்கு வராததால், மழையிலும் இரண்டாவது நாளாக விவ சாயிகள் வனப்பகுதிக்குள் போராட்டத்தைத் தொடர்ந்த னர்.