districts

img

மீனவ குடியிருப்பு பகுதிக்கு அருகே வந்த கப்பல்

தூத்துக்குடி,டிச 12 தூத்துக்குடியில் காற்றின் வேகம் காரணமாக மீனவ குடி யிருப்பு பகுதிக்கு அருகே வந்த பார்ஜர் கப்பலால் பரபரப்பு ஏற்பட்டது.  தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவு, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு சரக்குகளை கொண்டு செல்வதற்காக பார்ஜர் எனப்படும் சிறிய வகை கப்பல் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான டன் எடை யுள்ள இது தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு சரக்குகளை ஏற்றிச் செல்வது  வழக்கம். பழைய துறைமுகத்தில் இடம் இல்லாத காரணத்தினால் சில நேரங்களில் துறைமுகத்தின் வெளிப்பகுதியில் நிறுத்தப்படும். இந்நிலையில், “முத்தா எமரால்ட்” என்ற பார்ஜர் கப்பல் பழைய துறைமுகத்தில் வெளிப்பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தது. இந்த கப்பலானது ஞாயிறன்று காலை திடீரென காற்றின் வேகம்  காரண மாகவோ கடல் சீற்றத்தின் கார ணத்தினாலோ அங்கிருந்து இனிகோ நகர் கடற்கரை பகுதி யில் வந்து மோதியது.  இந்த கப்பல் வருவதைக் கண்ட மீனவர்கள் உடனடியாக அங்கிருந்த தங்களது பைபர் படகுகளை கடற்கரைக்கு கொண்டு சென்றனர். இதன் கார ணமாக படகுகள் விபத்தில் இருந்து தப்பின. இந்த பார்ஜெர் கப்பல் கரைக்கு வந்ததை அப்பகுதி மக்கள், சிறுவர்கள், சிறுமிகள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

;