districts

மதுரை முக்கிய செய்திகள்

வருவாய்த்துறையினர்  விடுப்பு எடுத்து போராட்டம்

தேனி, மார்ச் 23- நான்கு ஆண்டுகளாக தாமதிக்கப்டும் துணை ஆட்சி யர் பதவி உயர்வு ,அலுவலக உதவியாளர் பணியிடத்தை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின்  சார்பில் ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடு பட்டனர். தேனி மாவட்டத்தில் வருவாய் துறையில் மொத்த முள்ள 215 பேர்களில் 173 பேர் விடுப்பு எடுத்து போராட் டத்தில் கலந்து கொண்டனர். இதனால் வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு  பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற  போராட்டத்தால் மதுரை மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில்  வருவாய்த்துறை அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

ஒட்டன்சத்திரத்தில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

ஒட்டன்சத்திரம், மார்ச் 24-  ஒட்டன்சத்திரத்தில் தனியார்துறை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மார்ச் 25 அன்று நடக்கிறது.  திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும்  ஊராட்சித்துறை, தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புற வாழ்வா தார இயக்கம் சார்பில் ஒட்டன்சத்திரத்தில் ஆசிரியர் பயிற்சி  நிறுவன வழக்கத்தில் வருகின்ற 25 ஆம் தேதி சனிக்கிழமை ஒட்டன்சத்திரம் வட்டார அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. வேலை வாய்ப்பு எதிர்நோக்கி காத்திருக்கும்  8 ஆம்  வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை டிப்ளமோ, ஐடிஐ மற்றும்  கணினி  உள்ளிட்ட பல்வேறு படிப்புகள் படித்தவர்களுக்கு தகுதியுடைய வேலை நாடுவோரை தேர்ந்தெடுக்க உள்ள னர். தங்களது கல்விச்சான்று, ஆதார் அடையாள அட்டை, புகைப்படம் மற்றும் குடும்பஅட்டை ஆகிய வற்றின் நகளுடன் நேரில் வருகை புரிந்து கலந்து கொண்டு  பயப்படுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மார்ச் 29 தாயமங்கலத்தில்  கோவில் திருவிழா துவக்கம் 

சிவகங்கை, மார்ச் 21- சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா தாய மங்கலம் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா  மார்ச் 29 தொடங்கி ஏப்ரல் 7 வரைக்கும் நடைபெற உள்ளது.  இவ்விழாவை இக்கோயிலின் பரம்பரை அறங்காவ லர் வெங்கடேசன் செட்டியார் மற்றும் ஊழியர்கள்  ஏற்பாடு செய்து  வருகிறார்கள் .கோயில் வளாகத்தில்  உள்ள தெப்பக்குளம் தூர்வாரப்பட்டு, தண்ணீர் நிரப்பப் பட்டது. விழா தொடங்கும் முன்பே பக்தர்கள் ஏராளமா னோர் வரத் தொடங்கி விட்டார்கள். அரசு போக்குவரத்துக்  கழக காரைக்குடி கோட்டம் சார்பில் மதுரை,காரைக்குடி, சிவகங்கை, பரமக்குடி, அருப்புக்கோட்டை மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்பு பேரூந்துகள் இயக்  கப்படுகின்றன. காவல்துறையினர் பாதுகாப்பு பணியிலும் சுகாதாரத்துறையினர் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கை யிலும் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆண்டுகளைவிட இந்த  ஆண்டு கடைகள் ஏலம் இரண்டு மடங்கு ஏலம் போயி ருக்கின்றன. கோயில் வருவாயை இரட்டிப்பாயிருக்கி றார்கள். ஏப்ரல் 5 பொங்கல் திருவிழா தாயமங்கலத்தை சுற்றியுள்ள 300க்கு மேற்பட்ட கிராமங்களில் பொங்கல் திருவிழா கொண்டாட்டம் நடைபெற உள்ளது.

சாலையோரத்தில் குவிந்த  மணலை அகற்றக் கோரிக்கை

சின்னாளப்பட்டி,மார்ச் 23- திண்டுக்கல் மாவட்டம் கொடைரோட்டை அடுத்த மெட்டூர் மேம்  பாலம் மற்றும் தனியார் கல்லூரி எதிரே சாலையோரத்தில் மணல் குவிந்து கிடக்கிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி, விபத்துக்கள் நேரிடுகிறது. இது குறித்து பலமுறை தேசிய நான்கு வழிச்சாலை சுங்கச்சாவடி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நட வடிக்கை இல்லை என்றும் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடி யாக இந்த மணலை அப்புறப்படுத்தி வாகன விபத்துகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இப்பகுதி வாகன ஓட்டி கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.