districts

img

மதுரை மக்களின் கோரிக்கைகளை கேட்டு திமுக அரசு நிறைவேற்றி வருகிறது

அமைச்சர்  கே.என்.நேரு பேட்டி

மதுரை, செப்.3-  மதுரையில் பத்தாண்டுகளாக எந்தவொரு வளர்ச்சி பணிகளையும் முந்தைய அதிமுக அரசு செய்ய வில்லை.தற்போது திமுக அரசு  தற்போது மக்களுடைய கோரிக்கை களை கேட்டு நிறைவேற்றி வருகிறது என்று அமைச்சர் கே.என்.நேரு தெரி வித்தார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் நகராட்சி நிர்வாகத்துறை சார்ந்த  வளர்ச்சி திட்டப்பணிகள், மதுரை, சிவ கங்கை மாவட்ட வளர்ச்சிப் பணிகள்  குறித்த ஆய்வுக்கூட்டம் சனிக்கிழமை யன்று நடைபெற்றது.இக் கூட்டத்தில் நகராட்சி வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, ஊரக வளர்ச்சித்  துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப் பன், மதுரை நாடாளுமன்ற உறுப்பி னர் சு.வெங்கடேசன், சிவகங்கை நாடா ளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்ப ரம், மாநகராட்சி மேயர் இந்திராணி, மாவட்ட ஆட்சியர் எஸ். அனிஷ் சேகர்,  மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜித் சிங் காலோன், துணை மேயர் டி. நாக ராஜன் மற்றும் சட்டமன்ற உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் கடந்த ஆண்டில் மாநக ராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய பகு திகளில் எவ்வளவு வளர்ச்சி பணிகள் நடைபெற்று உள்ளன எனவும், நடப்பு  ஆண்டில் மேற்கொள்ள வேண்டிய பணி கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில் “மதுரைக்கு ஒரே ஆண்டில் ஆயிரம் கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, மதுரையை மேம்  படுத்த பல்வேறு நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.  பத்திரிக்கையாளர் ஒருவர் மதுரை யில் சாலைகள் மிக மோசமாக உள்ளது.  மக்கள் நடந்து செல்வது கூட முடியாத  சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது திமுக அரசு என்ன செய்யப் போகிறது  என்ற பத்திரிகையாளரின் கேள்விக்கு,  கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசு  மக்கள் அடிப்படை பிரச்சனைகளை கவனிக்கவில்லை. தற்போது பொறுப் பேற்று ஒன்றேகால் வருடத்தில் திமுக அரசு சிறப்பு நிதியினை ஒதுக்கி, அதை  நேரடியாக மாவட்டங்களுக்கு சென்று  என்ன அடிப்படை திட்டங்கள் செயல் படுத்தப்பட வேண்டும் என்பதையும் கேட்டு அதை முதலமைச்சரின் கவ னத்திற்கு கொண்டு சென்று, அதிகாரி கள் மூலமாக அதை செயல்படுத்து வதற்கு திட்டங்கள் வகுத்து வருகிறது. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசனும் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். அந்த அடிப்படை யில் அவைகளை செயல்படுத்துவதற் கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரு கிறது என்றார்.

மாநகராட்சிப் பணி ஒப்பந்த முறை விரைவில் ரத்து 

மதுரை மாநகராட்சி பகுதியில் நான்கு நாட்களுக்கு ஒரு முறை தான்  குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது என்ற கேள்விக்கு. மதுரை மாநகராட்சி பகுதிகளில் 167 எம்.எல்.டி தண்ணீர் கொடுக்க வேண்டும், தற்போது 156  எம்.எல்.டி தண்ணீர் மதுரை மாநக ராட்சி பகுதிகளுக்குள் கொடுக்கப்பட்டு வருகின்றது .சில இடங்களில் குழாய் உடைப்புகள் ஏற்பட்டுள்ளது .அவற்றை யும் சரி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. சரி செய்த பின்  முறையாக குடிநீர் விநியோகம் செய்  யப்படும்.மதுரை மாநகராட்சி பகு திக்குள் 1200 சாலைகள் அமைக்கப்  பட்டு வருகிறது. சாலை அமைக்க ரூ. 100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் பாது காப்புக்காக ரூ. 80 லட்சம் மதிப்பில்  பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கப் பட்டுள்ளன. மாநகராட்சிகளில் மேற் கொள்ளப்படும் பணிகளில் ஒப்பந்த முறை விரைவில் ரத்து செய்யப்படும்.  மாநகராட்சி பணிகளுக்கு டி.என்.பி.எஸ்.சி மற்றும் நேரடி நியமனம் மூலம்  பணியாளர்கள் நியமனம் செய்யப்படும் என்று அமைச்சர் கூறினார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாநிலக்குழு உறுப்பினர் இரா.விஜயராஜன் ஆகியோர் கலந்து  கொண்டு மதுரை மேற்கு, வடக்கு, தெற்கு, மத்திய சட்டமன்ற தொகுதி களில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தமிழக முதல்வர் அறிவித்த சிறப்பு நிதி ஆயி ரம் கோடி ரூபாயில் செயல்படுத்தி கொடுக்க வேண்டும். மாநகராட்சி தெருப் பகுதிகளில் பாதாள சாக்கடை கழிவுநீர் தேங்குவதை தடுக்க நிரந்தர  தீர்வு காண வேண்டும், சாலைகளை சீர மைக்க வேண்டும். குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி மனுக்களை அளித்தனர்.

;