சென்னை,ஜூலை 13- சென்னை தி.நகரை சேர்ந்தவர் சதுர்வேதி சாமியார். இவர் மீது கடந்த 2004 ஆம் ஆண்டு தொழில் அதிபர் மனைவி மற்றும் மகளை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இது போன்று சதுர்வேதி சாமியார் மீது மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவு களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டி ருந்தது. மொத்தம் 5 வழக்குகள் அவர் மீது போடப் பட்டிருந்தது. இந்த வழக்குகளில் சதுர்வேதி சாமி யார் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார். அதன் பின்னர் அவர் தப்பி ஓடி தலைமறைவானார். பல இடங் களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து காவல்துறையினர் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று நீதி மன்றத்தில் மனு அளித்தனர். அதை ஏற்று பெண்களுக்கு எதிரான குற்றங் களை விசாரிக்கும் சென்னை மகிளா நீதிமன்றம், சதுர்வேதி சாமியாரை தேடப் படும் குற்றவாளியாக அறிவித்தது. வருகிற 31 ஆம் தேதிக்குள் சதுர்வேதி சாமியார் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.