districts

img

தேனியில் மாணவர் கலைத்திருவிழா ஆட்சியர் துவக்கி வைத்தார்

தேனி, டிச.6- தேனியில் பி.சி. பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகளை மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன் துவக்கி வைத்து பார்வையிட்டார்.  பள்ளிக்கல்வித்துறையின் மூலம் மாவட்ட அள விலான கலைத்திருவிழாப் போட்டிகள் தேனி மாவட்டத்  தில் 3 மையங்கள் அமைக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை முதல் சனிக்கிழமை வரை நடைபெறுகிறது. அதன்படி,  6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான போட்டிகள் தேனி பி.சி.பெண்கள்  மேல்நிலைப்பள்ளியிலும், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு  மாணவர்களுக்கு தேனி நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியிலும் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கொடுவிலார்பட்டி கம்ம வார் கல்வியியல் கல்லூரியில் டிசம்பர் 7 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. மாநில அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் மற்றும் கலையரசன், கலையரசி என்ற விருதுகளும், மாநில அளவில் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டு மாணவர்களின் கலைத்திறன்கள் ஊக்கப்படுத்தப்படும். மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களில் தரவரி சையில் முதன்மை பெறும் 20 மாணவர்கள் வெளிநாடு களுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட வுள்ளார்கள். இந்நிகழ்வின் போது, முதன்மைக் கல்வி அலுவலர் எஸ்.செந்தி வேல்முருகன், பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கொண்டனர்.