districts

img

மதுரையில் வீடுகளை ஆக்கிரமித்த பாதாளச் சாக்கடை காற்றில் கலந்துபோன தலைமைச் செயலர் உத்தரவு

மதுரை, செப்.17- மதுரையில் சாலைகள் ஆக்கிரமிப்பு ஒன்றும் வியப் பிற்குரிய விஷயமல்ல. தற்போது வீடுகளை பாதாளச் சாக்கடை ஆக்ரமித்துள்ளது தான் ஆச்சர்யமான விஷயம். மதுரை  பெத்தானியாபுரம் காமராஜர் தெருவில் வீடு களை பாதாளச்சாக்கடை ஆக்கிரமித்துள்ளது. இத னால் நோய்த் தொற்று பரவும் அச்சம் உள்ளது. காமராஜர் தெருவில் வசிக்கும் கண் ணன் கூறுகையில், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பாதாள சாக்கடை கழிவுநீர்  அடிக்கடி பொங்கி வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால்  சுகாதார சீர்கேடு நிலவுகிறது. பூராண், கரப்பான் பூச்சி, எலி  தொல்லைகளுக்கு ஆளாகிவருகிறோம். மாநகராட்சியிடம் தெரிவித் தால் “ஒருநாள் தீர்வு காணப்படுகிறது”   நிரந்தரத் தீர்வு காண்பதற்கு வழி கண்டுபிடிக்கப்படவில்லை. சாலைகள் பெயர்த்து எடுக் கப்படமால் போடப்பட்டதால்  வீடுகள் பள்ளமாகிவிட்டது. இதனால் பாதாளச்சாக்கடை கழிவுநீர் வீடுகளுக்குள் வருகிறது.  டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் பரவும் நிலையில் மாநகராட்சி நிர்வாகம் நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டு மென்றார். சாலைகளை பெயர்த்து எடுத்துத்தான் புதிதாக சாலை அமைக்க வேண்டும் என தலைமைச் செயலர் இறையன்பு பிறப் பித்த உத்தரவு காற்றில் கலந்துபோனது தான் மிச்சம்.

;