districts

மதுரை முக்கிய செய்திகள்

அகில இந்திய யாத்திரை பணியாளர் சங்கத்தினரை இந்து அறநிலையத்துறை அங்கீகரிக்க வேண்டும்

இராமேஸ்வரம் நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம்

இராமேஸ்வரம், ஜூலை 27- இராமநாதசுவாமி கோயிலில் தலை முறைகளாக ஆன்மீக பணியாற்றும் அகில இந்திய யாத்திரை பணியாளர்களை இந்து  சமய அறநிலைத்துறை அங்கீகரிக்க வேண்  டும் என இராமேஸ்வரம் நகர் மன்ற கூட் டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  இராமநாதபுரம் மாவட்டம், ராமேசு வரம் மாதாந்திர நகர் மன்ற கூட்டம் கூட்ட ரங்கில் நகர்மன்றத் தலைவர் கே.இ. நாசர்கான் தலைமையில் திங்கட்கிழமை நடைபெற்றது. நகராட்சி ஆணையர் கண்  ணன் முன்னிலை வகித்தார். பொறியாளர் அய்யனார் மற்றும் நகர் மன்ற உறுப்பி னர்கள் கலந்துகொண்டனர்.  இராமேசுவரம் நகராட்சியில், சாலை, குடிநீர், தெரு விளக்குகள், மழைகாலத் திற்குள் கால்வாய் தூர் வாரும் பணி, சுகா தாரப்பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். இதே போன்று இந்து சமய  அறநிலையத்துறையின் கீழ் உள்ள ராம நாதசுவாமி கோயிலில் தலைமுறைகள் கடந்து ஆன்மீக பணிகளை மேற்கொண்டு வரும் அகில இந்திய யாத்திரை பணியா ளர்கள் சங்க 425 உறுப்பினர்கள் உள்ளனர்.  இந்த சங்கம் உரிய பதிவு செய்து இராமேஸ்  வரம் வரும் அனைத்து மாநில பக்தர் களின் ஆன்மீக பணிகளை செய்து வரு கின்றனர். இந்த சங்கத்தை அங்கீகரிக்கும் வகையில் இந்து சமய அறநிலைத்துறை உரிய அங்கீகாரம் வழங்கிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கிரானைட் முறைகேடு வழக்கு: மு.க.அழகிரியின் மகன்  நீதிமன்றத்தில் ஆஜர்

மதுரை, ஜூலை 27- மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழவளவு பகுதி யில் சட்ட விரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக அரசு சார்பில் 2012 -13 ஆம் ஆண்டு வழக்கு தொட ரப்பட்டது.  இந்த வழக்கில் ஓலம்பஸ் குவாரி நிறுவனத்தின் பங்கு தாரரான முன்னாள் ஒன்றிய அமைச்சர் மு.க அழ கிரியின் மகனான துரைதயாநிதி உள்ளிட்ட சிலர் மீது  மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.. இந்த நிலையில் வியாழனன்று மேலூர் நீதி மன்றத்தில் துரை தயாநிதி நேரில் இவ்வழக்கு தொடர்பாக ஆஜர் ஆனார். இந்த நிலையில் இந்த வழக்கு மதுரை மாவட்ட கனிமவள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு வரு கின்ற செப்டம்பர் 5ஆம் தேதி அங்கு விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது.

நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை முல்லைப்பெரியாறு அணை 121 அடியை தாண்டியது

தேனி, ஜூலை 27- நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை  பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரித்து முல்லைப்பெரியாறு அணை 121.20 அடியை  எட்டியது. தென்மேற்கு பருவமழை தீவிரமடையாத தால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்  மட்டம் உயரவில்லை . கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இத னால் அணையின் நீர்மட்டமும் சீராக உயர்ந்  தது. புதன்கிழமை 120.80 அடியாக இருந்த நீர்மட்டம் வியாழனன்று காலை 121.20 அடி யாக உயர்ந்தது. அணைக்கு 1321 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகு திக்கு 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது.  வைகை அணை நீர்மட்டம் 49.21 அடியாக உள்ளது. நீர் வரத்து இல்லாமல் இருந்த நிலை யில் இன்று காலை 47 கன அடி நீர் வரு கிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன  அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணை யின் நீர்மட்டம் 47.92 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 76.03 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன  அடி நீர் திறக்கப்படுகிறது.  மழையளவு  பெரியாறு 15, தேக்கடி 8.2, சண்முகா நதி  அணை 1.2, உத்தமபாளையம் 0.8 மிமீ மழை  அளவு பதிவாகியுள்ளது.

ஆக.2 தேனியில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு முகாம்

தேனி, ஜூலை.27- தேனியில் மாற்றுத்திறனாளி களுக்கு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வருகிற 2 ஆம்  தேதி நடைபெறும் என தேனி ஆட்சி யர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பு: தேனி மாவட்ட நிர்வாகம்,  வேலை வாய்ப்பு மற்றும் பயிற் சித்துறை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆகியவை இணைந்து மாற்றுத் திறனாளி களுக்கான தனியார் வேலை வாய்ப்பு முகாமை வருகிற 2-ந் தேதி காலை 9 மணி முதல் மதியம்  2 மணி வரை தேனி மாவட்ட ஆட்சி யர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலை யத்தில் நடத்துகின்றன. இந்த முகாமில் தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 8ம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும்  உயர் கல்வி பயின்ற மாற்றுத் திற னாளிகளுக்கு தங்கள் நிறுவ னங்களில் காலியாக உள்ள பணி யிடங்களுக்கு ஆட்களை தேர்வு  செய்ய உள்ளனர். தேர்வு செய்  யப்பட்டவர்களுக்கு அன்றைய தினமே பணி நியமன ஆணை கள் வழங்கப்படும்.

வரதட்சணை கேட்டு கொடுமை: கணவர் உட்பட 5 பேர் மீது வழக்கு

தேனி , ஜூலை.27- பெரியகுளம், வடகரை பூந்தோட்டத் தெருவைச் சேர்ந்தவர் திவ்யா (வயது 28). இவருக்கும் புல்லக்கா பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்த கதிரேசன் என்பவ ருக்கும் கடந்த 2020ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. கடந்த தீபா வளி சமயத்தில் திவ்யா மற்றும் குழந்தையை அவரது பெற்றோர் வீட்டில் விட்டு விட்டு கதிரேசன் வந்து விட்டார். அப்போது மீண்டும் வீட்டுக்கு வரும் போது 50 பவுன்  நகையுடன் வந்தால்தான் வாழ முடியும் என கூறி யுள்ளார். மேலும் வேறு ஒரு பெண்ணை 2-வது திரு மணம் செய்ய முயன்றுள்ளார்.  இதுகுறித்து பெரியகுளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலை யத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீ சார் கணவர் மற்றும் அவரது குடும்பத்தை எச்சரித்து சேர்ந்து வாழுமாறு கூறியுள்ளனர். அதன்படி மீண்டும் தனது மனைவி மற்றும் குழந்தையை வீட்டுக்கு அழைத்து வந்தனர். சில மாதங்கள் கழித்து மீண்டும் திவ்யாவிடம் 50 பவுன் நகை வாங்கி வரச்சொல்லி அடித்து கொடுமைப் படுத்தி வீட்டை விட்டு விரட்டி விட்ட னர். இது குறித்த புகாரில் கணவர் கதிரேசன், மாமனார்  முருகன், மாமியார் அம்சராணி மற்றும் சந்துரு, சுமதி  ஆகிய 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை  நடத்தி வருகின்றனர்.

;