districts

img

மதுரை மாநகர் சிஐடியு 10-ஆவது மாவட்ட மாநாடு பேரணியுடன் துவங்கியது

மதுரை, செப் 17-  மதுரை மாநகர் சிஐடியு 10-ஆவது மாவட்ட மாநாடு சனிக்கிழமை பேர ணியுடன் தொடங்கியது. அனுப்பா னடி பேருந்து நிலையத்திலிருந்து  புறப்பட்டட பேரணியை மூட்டா மாவட்டச் செயலாளர் முனைவர் ஏ.டி.செந்தாமரைக்கண்ணன் துவக்கி வைத்தார்.  பேரணியில் சிஐடியு மாநிலத் துணைப் பொதுச் செயலாளர்  கே. திருச்செல்வன் உள்ளிட்ட  மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்ட னர். தொடர்ந்து  தெப்பக்குளம் அருகில் உள்ள சிஐடியு  ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரான தோழர் பி. ராமமூர்த்தி சிலைக்கு மாவட்டத் தலைவர் மா. கணேசன், ‘மாநிலத்  துணைப் பொதுச் செயலாளர் கே. திருச்செல்வம், மாவட்டச் செயலா ளர் இரா. தெய்வராஜ், மாநகராட்சி துணை மேயர் டி. நாகராஜன் ஆகியோர் மாலை அணிவித்தர்கள்  மாநாட்டு அரங்கில் சிஐடியு கொடியை மாவட்டத் துணை தலை வர் வி. அழகுமலை ஏற்றி வைத்தார். தொடர்ந்து பொது மாநாடு  மாவட்டத் தலைவர் மா. கணேசன் தலைமையில் தொடங்கியது. உத வித் தலைவர் எஸ்.சந்தியாகு அஞ்சலி தீர்மானத்தை முன்மொ ழிந்தார். மாநிலக்குழு உறுப்பி னர் ஏ. கனகசுந்தர் வரவேற்றார். மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் சிறப்புரையாற்றி னார் தொடர்ந்து  ஞாயிறு அன்றும் மாநாடு நடைபெறுகிறது. 

;