திருச்சி கேர் கல்லூரியில் டிசம்பர் 30-ஆம் தேதி அரசு விழா நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க தமிழக முதல்வர் வருகை தரவுள்ளதையொட்டி நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, கேர் கல்லூரி வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் விழா பணிகளை வியாழனன்று நேரில் பார்வையிட்டு, அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார். அருகில் மாவட்ட ஆட்சியர் சிவராசு, சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, சௌந்தரபாண்டியன், கதிரவன், முன்னாள் துணை மேயர் அன்பழகன் மாவட்ட பிரமுகர் வைரமணி மற்றும் பலர் உள்ளனர்.