districts

img

திருவில்லிபுத்தூரில் தமுஎகச கலை மாலை

திருவில்லிபுத்தூர், அக்.16- திருவில்லிபுத்தூர் நகர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலை ஞர்கள் சங்கம் சார்பில் திரு வில்லிபுத்தூர் வடக்கு ரத வீதி பொது வெளியில் கலை மாலை நடைபெற்றது.  கிளை தலைவர் பால கிருஷ்ணன் தலைமை வகித்தார். கிளை செயலா ளர் நித்தியானந்தம் வர வேற்றார். மாவட்டச் செய லாளர் லட்சுமிகாந்த் துவக்கி வைத்தார். நகர்மன்ற துணை தலைவர் செல்வ மணி, அரசு வழக்கறிஞர் மற்  றும் எழுத்தாளருமான கவி ஞர் அன்னக்கொடி, மாவட்  டத் துணை செயலாளர் ஜெகன், கிளை பொருளா ளர் மரிய டேவிட் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.  நிகழ்வில், கவிஞர்கள் கவிதை வாசிப்பு, இராஜ பாளையம் உதயசங்கர் குழுவினரின் சேர்ந்திசை, புயல் கலைக்குழு தப்பாட் டம், நாகை லிம்போ கேச வன் பலூன் நடனம், தீப்பந்து  விளையாட்டுகள் நடை பெற்றன. ஶ்ரீவி அறுவை சிகிச்சை மருத்துவர் லட்சுமணன், அரசு மருத்துவமனை தலை மை மருத்துவர் காளிராஜ் ஆகியோருக்கு மனிதநேய மருத்துவ சேவைக்கான விருதுகளும், மாற்றுத் திற னாளிகளுக்கு சிறந்த சேவை  செய்து வரும் பிள்ளையார் நத்தம் கிராமத்தை சேர்ந்த அய்யக்காள், சிறந்த ஊர்க் காவல்படை காவலர் திலக வதி, சிறந்த சிறு கதை  எழுத்தாளர்கள் பசப்பி  பொன்ராஜ், ஓவியர் முனி யாண்டி ஆகியோருக்கும் விருது வழங்கப்பட்டது. கலை விழா சிறப்பாக நடை பெற்றமைக்கு சிறப்பான பணி செய்தமைக்கு ஓவியர் கலைச் செல்வனுக்கு விருது வழங்கப்பட்டது.  வாழும் வள்ளுவம் என்ற தலைப்பில் பட்டிமன்ற பேச்சாளர் கவிஞர் நந்த லாலா, ஊடக செயல்பாடு கள் பற்றி பட்டிமன்ற பேச்சா ளரும் ஆசிரியருமான இந்  திரா ஜெயச்சந்திரன், வைக்க மும் வள்ளலாரும் என்ற தலைப்பில் தேனி வசந்தன் ஆகியோர் பேசினர்.