சென்னை,ஏப். 27- தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023ஐ தமிழ்நாடு அரசு உடன் திரும்ப பெற வேண்டும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சாமி. நடராஜன் விடுத்திருக்கும் அறிக்கை வருமாறு:- நடந்து முடிந்த தமிழ்நாடு சட்ட மன்ற கூட்டத்தொடரின் கடைசி நாளில் தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 என்ற சட்டத்தை குரல் வாக்கெடுப்பின் மூலம் அரசு நிறை வேற்றியுள்ளது. சட்டமன்றத்திலுள்ள எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்க ளுக்கு முன்கூட்டியே இதுபோன்ற சட்ட முன்வடிவுகளை படித்து கருத்து சொல்வதற்குக்கூட போதிய அவகாசம் கொடுக்கவில்லை. மிக முக்கியமாக நிலம் தொடர்பாக ஒரு சட்டத்தை கொண்டு வருவதற்கு முன் உரிய முறையில், விவாதிக்காமல் அவசர கதியில் முழுக்க, முழுக்க பெரும் நிறுவனங்கள், தனியார் முதலாளிகளுக்கு சாதகமாகவும் ஏற்கனவே தமிழ்நாடு முழுவதும் நீர் நிலைகளை ஆக்கிரமித்துள்ள அரசியல் செல்வாக்கு படைத்தவர்கள், பெரும் கல்வி நிறுவனங்களை பாது காக்கும் நோக்கோடு இச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு முழுவது முள்ள 37 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய, பெரிய ஏரிகள், குளங்கள், இவற்றிற்கு செல்லும் நீர்வழிப் பாதை கள் உள்ளிட்டவற்றில் ஏற்கனவே ஆக்கிரமிப்புகள் உள்ளன. இந்த நிலை யில், மழை காலத்தில் கூடுதலாக பெய் தால் அந்த மழைநீரை கூட முறையாக சேமித்து வைக்க முடியாத நிலையில்தான் நீர்நிலைகள் உள்ளது. இதற்கு அடிப்படையான காரணம் அரசு முறையாக நீர்நிலைகளை பாது காக்காமல் உள்ளதுதான். பல இடங்க ளிலும் நீர்நிலைகள் ஆக்கிமிப்பு களால் அதன் முழு பரப்பளவு குறைந் துள்ளது. அரசின் புதிய சட்டத்தின் நோக்க காரண விளக்க உரையில் குறிப் பிட்டுள்ளபடி நீர்நிலைகள் பல குறிப்பாக ஆறுகள் மற்றும் ஓடை கள், காலபோக்கில், இயற்கை நிகழ்வு களால் அவற்றின் பரப்பையும், போக் கையும் மாற்றிக் கொள்கின்றன என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது எந்த அளவிற்கு சரியானது என எந்த ஆய்வுமில்லை. ஏனென்றால் ஏற்கனவே உள்ள நீர்நிலைகள், ஆறு கள் ஓடைகளின் பரப்பையும் அதன் போக்கையும் செயற்கையாக ஆக்கிர மிப்பின் மூலமாகத்தான் பெரும்பகுதி நடைபெற்றுள்ளது என்பதை அரசு உணர வேண்டும். நிலம் கையகப்படுத் துவற்கு ஏற்கனவே பல சட்டங்கள் உள்ள நிலையில் ஏழை, சிறு-குறு விவசாயிகளிடம் உள்ள நிலங்களை யும், வளர்ச்சி திட்டம் என்ற பெயரில் அரசு அறிவிக்கும் எந்த திட்டத்திற்கும் எந்த வரன்முறையுமின்றி நிலங்களை இந்த சட்டத்தின் மூலம் எடுக்க வழி வகை செய்யும். மேலும், பரந்தூர் விமான நிலையம் உட்பட தமிழ்நாடு அரசு அறிவித்திருக் கும் பல்வேறு சிப்காட் தொழிற்பேட்டை மற்றும் ஜவுளி பூங்கா போன்ற திட்டங்களுக்கும் சாதாரண விவசாயி களுடைய நிலங்களையும், இந்த சட்டத்தின் மூலம் நிலத்தை கையகப் படுத்த முடியும். நிலம் தொடர்பான உள்ளாட்சி அமைப்புகளுக்கு உள்ள அதிகாரம் இச்சட்டத்தின் மூலம் நீக்கப்பட்டு அரசு அமைக்கும் நிபுணர் குழுவிற்கு முழு அதிகாரமும் வழங்கப்படுவது ஆபத்தானது. எனவே தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள நில ஒருங்கி ணைப்பு சட்டம் 2023 எந்த வகையி லும் நீர்நிலைகளை பாதுகாத்திட உத வாது. மாறாக, கார்ப்பரேட் நிறுவனங்க ளுக்கும், தொழில் வளர்ச்சி மற்றும், புதிய வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் நீர்நிலைகளை தனியாருக்கு தாரை வார்க்கத்தான் பயன்படும். எனவே, தமிழ்நாடு அரசு இச்சட்டத்தை முழுமையாக திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித் திருக்கிறார்.