districts

img

தமிழகத்தில் சர்க்கரை உற்பத்தி கடும் வீழ்ச்சி; கரும்பு சாகுபடியும் குறைந்தது

அரசு ஆய்வு செய்ய டி.ரவீந்திரன் வலியுறுத்தல் மதுரை, டிச.15- மதுரை மாவட்டம் அலங்கா நல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவையை துவங்கிடக் கோரி சனிக்கிழமையன்று 5வது நாளாக தொடர்ந்து காத்திருக்கும் போராட்டம் நடைபெற்று வருகிறது.  போராட்டத்திற்கு, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் என்.பழனிச்சாமி தலைமை வகித்தார். இதில், கரும்பு விவசாயி கள் சங்க மாநிலப் பொதுச் செய லாளர் டி.ரவீந்திரன் சிறப்புரையாற்றி னார். விவசாயிகள் சங்க மாவட்ட செய லாளரும், சிபிஎம் புறநகர் மாவட்டச் செயலாளருமான கே.ராஜேந்திரன், மாநிலக் குழு உறுப்பினர் சி.ராம கிருஷ்ணன், மாவட்டத் தலைவர் எஸ்.பி.இளங்கோவன், மாவட்டப் பொருளாளர் வி.அடக்கிவீரணன், மாவட்டத் துணைச் செயலாளர் கே. முருகேசன், பெரியகருப்பன், கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் கரு.கதிரேசன் மற்றும் சங்க நிர்வாகிகள் விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் செயலாளர் சொ.பாண் டியன், சிஐடியு மாவட்டத் தலைவர் செ.கண்ணன், மாவட்டச் செயலாளர் கே.அரவிந்தன், சிபிஐ புறநகர் மாவட்டச் செயலாளர் பா.காளிதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 போராட்டத்தில்கரும்பு விவசாயி கள் மாநில பொதுச் செயலாளர் டி. ரவீந்திரன் பேசியதாவது: அலங்காநல்லூரில் தேசிய கூட்டு றவு சர்க்கரை ஆலை கடந்த 2 ஆண்டு களாக மூடி கிடைக்கிறது. இந்த ஆலையில் 2021 -2022 ஆண்டுக்கு கரும்பு அரவை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்காக தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார் பில் காத்திருக்கும் போராட்டம் 5-வது நாளாக நடைபெற்று கொண்டிருக்கி றது. தமிழ்நாட்டில் சர்க்கரை உற்பத்தி 10 ஆண்டுகளில் கணிசமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. கரும்பு சாகுபடி பரப்பும் குறைந்துள்ளது. இதற்கு என்ன காரணம் என்று ஆய்வு செய்ய வேண்டும்.  இந்த ஆண்டு தேவைக்கு அதிக மாக மழைபெய்து எல்லா நீர்நிலை களும் நிரம்பி நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஏற்கனவே கூட்டுறவு பொதுத்துறை சர்க்கரை ஆலையிடமி ருந்து பாக்கியை முழுவதும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் நீதி மன்றத்தில் வழக்குப் போட்டு ஒரு பைசா கூட பாக்கியில்லாமல் ரூ.325 கோடி ரூபாயை பெற்றுக் கொடுத்தி ருக்கிறது.

இது விவசாயிக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.  இந்த ஆலையினை பாதுகாக்க 10 ஆண்டுகளுக்கு முன்பு மின்சாரம் உற்பத்தி திட்டப் பணிகள் தொடங்கி பாதி வேலை முடிவடைந்துள்ளது. எனவே, அரசு உடனடியாக மின்சார உற்பத்தி திட்ட பணிகளை பூர்த்தி செய்ய வேண்டும்.  எத்தனால் உற்பத்தி பிளாண்ட் புனரமைப்பு பணிகள், ஆலை துவங்க பணிகளுக்கு 10 கோடி ரூபாய் மாநில அரசு கடனுதவி வழங்கி உதவி செய்ய வேண்டும். அதே போல இந்த ஆலைக்கு தேவையான தொழிலாளி கள் தேவையான அதிகாரிகளை நிய மனம் செய்ய வேண்டும்.  சர்க்கரை ஆலைகளை பாதுகாப்ப தற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வருவாய் பங்கீட்டு முறை சட்டத்தை தமிழ்நாட்டில் ரத்து செய்து விட்டு மாநில அரசுக்கு பரிந்துரை அறி வித்து வழங்க வேண்டும். பல மாநி லங்களில் ரூ.3,600 வரை கொடுக்கப் படுகிறது. இங்கு ரூ.4 ஆயிரம் என் பதை அமல்படுத்த வேண்டும். டிசம்பர் 28 ஆம் தேதி கூட்டுறவு பொதுத்துறை சர்க்கரை ஆலைகளின் மாநில கோரிக்கை மாநாடு கள்ளக் குறிச்சியில் நடைபெறுகிறது. அந்த மாநாட்டில் முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றி மாநில அரசுக்கு கொடுப் பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

;