districts

img

சு.வெங்கடேசன் எம்.பி., நிதியில் சின்டெக்ஸ் தொட்டி திறப்பு

மதுரை, ஜூலை 4- மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்க டேசன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.31 லட்சம்  மதிப்பீட்டில் முடிவுற்ற பணிகளின் திறப்பு விழா செவ்வாயன்று நடைபெற்றது . மத்திய சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வார்டு 51 ல் உள்ள கருகப்பிள்ளைக்கார தெருவில் போர்வெல் சிண்டெக்ஸ் மற்றும் வார்டு 50 தைக்கால் தெரு பகுதியில் சமுதாயக்கூடம், தெற்கு சட்டமன்ற தொகு திக்கு உட்பட்ட வார்டு 47 சின்னக்கடைத்தெரு, வார்டு  85 ரெங்கன் ஆசாரி சந்து, வார்டு 46 காமராஜர்புரம் இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் போர்வெல் சின்  டெக்ஸ், மேற்கு தொகுதி வார்டு 80 வீரகாளியம்மன் கோவில் நேதாஜி தெரு பேவர் பிளாக் ஆகியவை களை சு. வெங்கடேசன் எம்.பி., மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் . இதில் துணை மேயர் டி. நாகராஜன், மாமன்ற உறுப்பினர்கள் விஜயலட்சுமி கண்ணன், இந்திரா காந்தி ராஜேந்திரன், முத்துமாரி ஜெயக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர் மாவட்ட செய லாளர் மா. கணேசன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஜா. நரசிம்மன், அ. ரமேஷ், பகுதிக்குழு செய லாளர்கள் பி. ஜீவா, ஜெ. லெனின், ஏ. எஸ். செந்தில் குமார், மாவட்ட குழு உறுப்பினர்கள் பி. கோபிநாத், யூ. எஸ். அபுதாஹீர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

;