மதுரை ஜூலை 7- மதுரை மாவட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றியம் தெற்கு தெரு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் நமக்கு நாமே திட்டம் மற்றும் டிவிஎஸ் ஸ்ரீ சக்ரா நிறுவ னத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டம் 2022-23 நிதி பங்களிப்பின் மூலம் இரண்டு வகுப்பறையுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இக்கட்டிடத்தை மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் திறந்து வைத்தார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை ஆரோக்யா நல வாழ்வு அறக்கட்டளை திட்ட தலைவர் ஏற்பாடு செய்தார். இந்த நிகழ்ச்சியில் டிவிஎஸ் ஶ்ரீ சக்ரா மனித வள துணைத் தலைவர் சுரேஷ் சிவானந்தம், டிவிஎஸ் ஶ்ரீ சக்ரா பொது மேலாளர் விஜயகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலா, மேலூர் தாலுகாச் செயலாளர் எம்.கண்ணன், தாலுகாக் குழு உறுப்பினர்கள் எஸ். பி.மணவாளன், பி.எஸ்.ராஜாமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.