districts

img

சென்னை-கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் சிவகாசி ரயில் நிலையத்தில் நின்று செல்லக் கோரி மறியல்

சிவகாசி, செப்.22- கேரள மாநிலம் கொல்லம் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் எக்ஸ்பிரஸ் (எண்16101) ரயிலா னது, செங்கோட்டை, தென்காசி, சங்கரன்கோவில், இராஜபாளை யம், திருவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர் ரயில் நிலையங்களில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்கிறது. அதேவேளை,இதே ரயில் வண்டியானது (எண் 16102), சென்னையிலிருந்து கொல்லம் நோக்கிச் செல்லும் போது, சிவ காசி ரயில் நிலையத்தில் நின்று செல்லாது என தெற்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இத னால், சிவகாசியைச் சேர்ந்த வர்த்த கர்கள் மற்றும் பயணிகள் உட்பட பலர் பெரும் பாதிப்படைந்து வரு கின்றனர். சென்னையிலிருந்து வரும் போது, விருதுநகர் அல்லது, திரு வில்லிபுத்தூர் ரயில் நிலையத்தில் இறங்கி பேருந்து அல்லது ஆட்டோக்களில் கூடுதல் பணம் செலவு செய்து சிவகாசிக்கு வந்து  சேர வேண்டிய நிலை ஏற்பட்டுள் ளது.

எனவே, இதுகுறித்து விருது நகர் மக்களவை உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர்  ஏற்கனவே, ரயில்வே அமைச்சர் மற்றும் ரயில்வே அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பியுள்ளார். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. இதையடுத்து, வியாபாரிகள், காங்கிரஸ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகளைக் கொண்ட போராட்டக்குழு அமைக் கப்பட்டது.  அதில், சென்னை-கொல்லம் ரயில் சிவகாசி ரயில் நிலையத்தில் நிற்காமல் செல்வ தைக் கண்டித்து ரயில் மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி, வியாழனன்று மாலை சிவகாசியில் ரயில் நிலை யத்திற்கு மறியல் போராட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், விருதுநகர் மக்களவை உறுப்பி னர் ப.மாணிக்கம்தாகூர் ஆகி யோர் தலைமையில் ஏராளமா னோர் ஊர்வலமாகச் சென்றனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.அர்ஜூனன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் பி.என்.தேவா, கே.முருகன், நகர் செயலாளர் சுரேஷ்குமார், ஒன்றிய செயலாளர் பி.பால சுப்பிரமணியன், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ஜெயபாரத், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஸ்ரீராஜா சொக்கர் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.

;