சின்னாளபட்டி, செப்..08- சின்னாளபட்டி சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி மாணவ-மாணவியர்கள் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானியாக தேர்வு செய்யப்பட்டு முதலிடத்தை பெற்ற னர். பள்ளி முதல்வர் திலகம் மாணவ-மாணவியர்கள், பயிற்றுவித்த ஆசிரியர்களை பாராட்டி வாழ்த்தினார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கள் சார்பாக வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி தேர்வு செய்யும் நிகழ்ச்சி பழனி சாலையில் உள்ள பி.எஸ்.என்.ஏ. பொறியி யல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் சேரன் வித்யால யா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் இரண்டு பிரிவினர் மாவட்ட அளவில் முதலிடத்தை பெற்று பரிசை தட்டி சென்றனர். 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்க ளில் சேரன் வித்யாலயா மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த ஆர்.சுனில் ராஜ், எம்.துஷ்யந்த் ஆகிய இருவரும் முதலி டத்தை பெற்றனர். இதில் 9 ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவியர்களில் ஆர்.கீர்த்திகாஸ்ரீ (9 ஆம் வகுப்பு) மற்றும் எஸ்.அர்ச்சனா (11ஆம் வகுப்பு) ஆகிய இருவரும் மாவட்ட அளவில் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானிகளாக தேர்வு செய்யப்பட்டனர். வெற்றி பெற்ற பள்ளி மாணவ-மாணவியர்கள் மற்றும் பயிற்றுவித்த ஆசிரியர்களான ஆர்.பாண்டிசெல்வி, எம்.சரவணக்குமார் ஆகியோரை பள்ளி முதல்வர் திலகம் மற்றும் உதவி தலைமையாசிரியர் வெண்ணிலா ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.