மதுரை, ஆக.26- ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கை யை கண்டித்தும் மாற்றுத்திற னாளிகளை பாதிக்கக்கூடிய கடுமையான விலைவாசி உயர்வை கண்டித்தும் தமிழ் நாடு அனைத்து வகை மாற் றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக் கான சங்கம் சார்பில் தெரு முனை கூட்டம் செல்லூர் 50 அடி சாலையில் நடைபெற்றது. மாவட்ட உதவி தலைவர் பா.பழனியம்மாள் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.ராஜேந்தி ரன் முன்னிலை வகித்தார். மாநில நிர்வாகி எஸ்.நம்பு ராஜன், மதுரை மாநகராட்சி துணை மேயர் தி.நாகராஜன், சிஐடியு மாவட்டச் செயலா ளர் இரா.லெனின், ஜன நாயக மாதர் சங்க மத்தியக் குழு உறுப்பினர் ஆர்.சசி கலா, மாவட்டத் தலைவர் பி. வீரமணி, மாவட்டச் செயலா ளர் ஆ.பாலமுருகன், மாமன்ற உறுப்பினரும் சங்கத்தின் மாவட்ட உதவி செயலாளரு மான டி.குமரவேல் ஆகி யோர் பேசினர்.