districts

ஏழை, ஏளிய மக்கள் வசிக்கும் குடியிருப்புகளை அகற்றுவதை கைவிடுக!

விருதுநகர், செப்.6- விருதுநகர் மாவட்டத்தில் ஏழை, எளிய மக்கள் வசித்து வரும் குடியிருப்புகளை  அகற்றும் முயற்சியை கைவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருதுநகர் மாவட்டக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருதுநகர் மாவட்டக்குழு கூட்டம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆ.குருசாமி தலை மையில் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது கலந்து கொண்டு விளக்கிப் பேசினார். மாவட்ட செயலாளர் கே.அர்ஜூனன், மாநிலக்குழு உறுப்பினர் எம்.மகாலட்சுமி ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர். அதில் நிறை வேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு, விருதுநகர் மாவட்டத்தில் அரசுப் புறம்  போக்கு, நீர்நிலைப் புறம்போக்கு மற்றும் கோவில் நிலங்களில் ஆயிரக் கணக்கான ஏழை, எளிய குடும்பத்தினர் வீடுகள் அமைத்து  பல ஆண்டுகளாக குடியிருந்து வருகின்ற னர்.

இவர்களுக்கு வகை மாற்றம் செய்து  குடிமனைப்பட்டா வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கடந்த மே 6ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் மனுக்கள் அளிக்கப்பட்டன. ஆனால், அந்த மனுக்கள் மீது தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகம் எடுக்கவில்லை. மாறாக, இராஜபாளையம் அண்ணா  நகரில் அரசுப் புறம்போக்கு நிலத்தில் 18  குடும்பத்தினர்  60 வருடங்களாக குடியி ருந்து வருகின்றனர். இவர்களுக்கு பட்டா  வழங்க வழி வகை செய்யாமல்,அங்குள்ள வட்டாட்சியர், வீடுகளை இடிக்கப்போவ தாக மிரட்டி வருகிறார். இதேபோல், திருவில்லிபுத்தூர் ஒன்றி யம் கடம்பன்குளம் கண்மாய் அருகே 40 குடும்பங்களைச் சேர்ந்த ஏழை மக்கள் 45 வருடங்களாக குடியிருந்து வருகின்றனர். இந்த வீடுகளையும் இடிக்கப் போவதாக அங்குள்ள வட்டாட்சியர் முயற்சி செய்து  வருகிறார். எனவே, இரு பகுதிகளில் வாழும் ஏழை, எளிய மக்களின் குடியிருப்புகளை அகற்றக் கூடாது என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. மேலும், திருச்சுழி வட்டம், பரளச்சி அருகே உள்ள வாகைக்குளம் கிராமத்தில்  அரசு மதுபானக் கடை மற்றும் இராஜ பாளையம் வட்டம், சேத்தூரில் உள்ள டாஸ் மாக் கடை ஆகியவற்றை அகற்றக் கோரி  அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் மற்  றும் அரசியல் கட்சியினர் இணைந்து போராட்டம் நடத்தியுள்ளனர்.  அதன் பிற கும், கடைகளை அகற்ற மாவட்ட நிர்வாகம்  உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே,  உடனடியாக டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும்.

இந்து முன்னணி-பாஜகவினர் மீது வழக்கு பதிந்திடுக

மேலும், திருவில்லிபுத்தூர், அருப்புக் கோட்டை ஆகிய பகுதிகளில் விநாயகர் சிலை ஊர்வலம் என்ற பெயரில் மதக்  கலவரங்களை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்து முன்னணி மற்றும் பாஜகவினர் ஈடு பட்டு வருகின்றனர். காவல்துறையின் வழி காட்டுதல்களை மீறி கலகம் செய்து பல மணி நேரம் போக்குவரத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளனர். எனவே, தமிழக அர சும், மாவட்ட நிர்வாகமும், விருதுநகர் மாவட்  டத்தில் மக்கள் ஒற்றுமையை பாது காத்திட, இச்செயல்களில் ஈடுபட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

 

;