districts

img

திண்டுக்கல் - கரூர் சாலையில் சுரங்க பாலப்பணிகளை விரைந்து முடித்திடுக! சிபிஎம் வலியுறுத்தல்

திண்டுக்கல், நவ.9- திண்டுக்கல் கரூர் சாலையில் நடைபெறும் சுரங்க பாலப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.  திண்டுக்கல் திருச்சி மேம்பாலம் அருகே பிரியும் கரூர்  திண்டுக்கல் சுரங்க பாலப்பணி கடந்த ஓராண்டுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்த பாலத்தில் அவ்வப்போது நீருற்று ஏற்பட்டு பாலம் கட்டும் பணிகள் நின்று விடுகிறது.  இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக பல கட்ட போராடங்கள் நடத்தப்பட்டுள்ளன. ரயில்வே அதிகாரிகள், மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி களிடம் பல முறை புகார் கொடுத்து வலியுறுத்தப்பட்டுள் ளன. இந்த பாலம் பணி தாமதமாவதால் எம்.வி.எம். நகர்  உட்பட பல பகுதிகளைச் சார்ந்த மக்கள் பல கி.மீ தூரம்  சுற்றி வர வேண்டியுள்ளது. மேலும் திண்டுக்கல் கரூர்  சாலை வழியாக செல்ல வேண்டிய பயணிகள் பேருந்து  மற்றும் வாகனங்களும் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. எனவே இந்த பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க  வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.  மதுரையிலி ருந்து தனி அதிகாரி டிஆர்.ஓ. ராஜ்குமார், தனி தாசில்தார் செழியன் ஆகியோர்  ஆய்வு செய்தனர். அவர்களிடம் சிபிஎம் சார்பாக மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிதானந் தம், நகரச் செயலாளர் அரபுமுகமது, மாமன்ற உறுப்பி னர் கே.எஸ்.கணேசன், எம்.வி.எம். நகர் குடியிருப்போர் நலசங்க நிர்வாகி வைத்தியலிங்க பூபதி ஆகியோர் சந்தித்து பாலப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அதிகாரிகள் விரைந்து நட வடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். (நநி)