districts

100 வருடங்களுக்கு மேல் செயல்பட்டு வரும் சார் பதிவாளர் அலுவலகங்களை மூடுவதா?

விருதுநகர், மே 21- விருதுநகர் மாவட்டத் தில் 100 வருடங்களுக்கு மேலாக சிறப்பாக செயல் பட்டு வரும் சார் பதிவாளர் அலுவலகங்களை மாற்றும் முடிவை தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் கை விட வேண்டுமென மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேண்டு கோள் விடுத்துள்ளது. இதுகுறித்து அக்கட்சி யின் மாவட்ட செயலாளர் கே. அர்ஜூனன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டத்திற்கு உட்பட்டது குன்னூர். இங்கு கடந்த 1924 ம் ஆண்டு முதல் சார்பதிவாளர் அலு வலகம் சிறப்பாக செயல் பட்டு வருகிறது. இந்த அலு வலகத்தில், 22 வருவாய் கிரா மங்களைச் சேர்ந்த பொது மக்கள் தங்களது நிலம் மற் றும் வீடுகளை விற்பது, வாங் குவது தொடர்பாக பதிவு செய்து வந்தனர். இப்பகுதி மக்கள் விரைவில் சார் பதி வாளர் அலுவலகத்திற்கு வந்து,

விரைவில் பத்திரப் பதிவுகளை செய்து வந்த னர். இந்தநிலையில், இந்த சார் பதிவாளர் அலுவல கத்தை மூடி விட்டு, இப்பகுதி மக்கள் வேறு பகுதியில் உள்ள சார் பதிவாளர் அலு வலகத்தை நாடும் வகை யில் மாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவு எடுத்திருப்ப தாக தெரிகிறது. இதேபோல், கீழராஜகுல ராமன் பகுதியில் உள்ள சார்ப திவாளர் அலுவலகமானது கடந்த 1920 முதல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதையும் வேறு பகுதிக்கு மாற்றம் செய்ய மாவட்ட நிர்  வாகம் முடிவு செய்துள்ள தாக கூறப்படுகிறது. அவ்வாறு செய்தால், ஏற்கனவே, இந்த இரு பதி வாளர் அலுவலகங்களில் பணிபுரிவோரின் எண் ணிக்கை குறைக்கப்படும். மேலும், பொது மக்கள் பத்தி ரப்பதிவுக்காக, நீண்ட தூரம், அதிக அளவில் பணம் செலவு செய்து செல்ல வேண்டிய நிலை ஏற்படும். மேலும், இந்த பத்திரப் பதிவு அலு வலகங்களை நம்பியுள்ள பத்திர எழுத்தர்கள், உதவி யாளர்கள், கணினி இயக்கு வோர், ஜெராக்ஸ் கடை உரி மையாளர்கள் என பல்வேறு தரப்பைச் சேர்ந்தவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும், குன் னூர் மற்றும் கீழராஜகுல ராமன் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் சார் பதி வாளர் அலுவலகங்களை மாற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும்.  இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.  மேலும் இதுகுறித்து தமி ழக முதலமைச்சர் மற்றும் பதிவுத்துறை அமைச்சருக்கு கோரிக்கை மனுவையும் அனுப்பி வைத்துள்ளார்.