தேனி, டிச.17- அரசு அதிகாரிகள் போட்ட ஒப்பந்தத்தின் படி, கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை மாற் றுத்திறனாளிகள் முற்றுகை யிட்டனர். ஆண்டிபட்டி ஒன்றியத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நூறு நாள் வேலை திட்டத்தில் ஊனத்தை சொல்லி வேலை தர மறுப்பது, குறைந்த கூலி கொடுப்பது, மாலை 3 மணி வரை தளத்தில் இருக்க வைப்பது, பணித்தள பொறுப்பாளர்கள் மிரட்டல் போன்ற கொடுமைகளை சந்தித்து வரு கின்றனர். மாற்று திறனாளிகளின் குறைகளை களைய வலியுறுத்தி கடந்த 6.9.21 ஆம் தேதி ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலத்தில் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. பெரியகுளம் சார் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகளை அழைத்து பேசி னர். இதனை தொடர்ந்து கோரிக் கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்து ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டனர். எனினும் இதுவரை கோரிக்கைகள் நிறை வேறவில்லை.
முற்றுகை
ஒப்பந்தப்படி கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆண்டி பட்டி ஒன்றியக்குழு அலுவல கத்தை சங்கத்தின் தேனி மாவட்ட செயலாளர் கே.தயாளன் தலைமை யில் ஒன்றிய செயலாளர் வேலுச் சாமி, இந்திராணி, கருணாகரன் (எ) அய்யாவு, திருமலைச்சாமி, முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட முற்றுகை போராட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா ளர் எஸ்.மீனாட்சிசுந்தரம் போராட் டத்தை ஆதரித்து பேசினார். பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கைகளை நிறை வேற்றுவதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்.