districts

img

காலமானார்

மதுரை, மே 13- மதுரை ஆரப்பாளை யத்தைச் சேர்ந்த சாந்தி காலமானார். மார்க்சிஸ்ட் கம்  யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டச் செயலா ளராகவும் தீக்கதிர் மேலாளராகவும் பொறுப்பு வகித்து மறைந்த தோழர் வெ.சுந்தரத்தின் சகோதரியும் வி.சீனி வாசனின் மனைவியுமான சாந்தி (51) உடல் நலக் குறைவால் சனிக்கிழமை அதிகாலை காலமானார். அவரது மறைவுச் செய்தியறிந்து மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செய லாளர் மா.கணேசன், மாவட்டக்குழு உறுப்பினரும் துணை மேயருமான டி.  நாகராஜன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜா. நரசிம்மன், பகுதிக்  குழுச் செயலாளர் வை.ஸ்டாலின், மாமன்ற உறுப்பினர் வை.ஜென்னியம்  மாள், ஏ. பாண்டி ஆகியோர் சாந்தியின் உடலுக்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினர். இறுதி நிகழ்ச்சி சனிக் கிழமை மாலை ஆரப்பாளையம் வேளா ளர் தெருவில் உள்ள அவரது இல் லத்தில்  நடைபெற்றது.