districts

img

அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துக!

தேனி, ஜூலை 24- தேனி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் அடிப்  படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கத்தின் தேனி மாவட்ட மாநாடு கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய மாணவர் சங் கத்தின் தேனி மாவட்ட 9 ஆவது மாநாடு உத்தம பாளையத்தில் நடைபெற் றது. மாவட்ட தலைவர் டி. நாகராஜ் தலைமை வகித் தார். அஞ்சலி தீர்மானத்தை சாய் ஸ்ரீநாத் வாசித்தார். மாநில துணைச் செயலாளர் முகேஷ் தொடக்கி வைத்து பேசினார். வேலையறிக்கை யை மாவட்டச் செயலாளர்  வேல் பிரகாஷ் சமர்ப்பித் தார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செய லாளர் சி.முனிஸ்வரன் வாழ்த்தி பேசினார். புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்தும், மாநாட்டை நிறைவு செய்தும் மாநில துணை தலைவர் எம்.கண்  ணன் நிறைவுரை ஆற்றினார். புதிய நிர்வாகிகள்  தலைவராக ஜி.அருண், செயலாளராக வேல்பிர காஷ், மாவட்ட நிர்வாகி களாக சாய்ஸ்ரீநாத், முத்  தமிழன், சதீஷ், சண்முக சுந்தரம், ஸ்ரீவர்த்தினி உள் ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். பள்ளி, கல்லூரி நேரங்  களில் கூடுதல் பேருந்து களை இயக்க வேண்டும். பாளையம், கம்பம் பகுதி யில் அரசு கல்லூரி துவங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.