மதுரை, அக் 2- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் கேரள மாநில முன் னாள் செயலாளரும் கேரள முன் னாள் அமைச்சருமான கோடியேரி பாலகிருஷ்ணன் அக்டோபர் 1 அன்று காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அஞ்சலி கூட்டங்கள் நடைபெற்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுரை மாவட்டக்குழுக்கள் சார்பில் மாவட்டக்குழு அலுவல கத்தில் மாநகர் மாவட்டச் செயலா ளர் மா. கணேசன் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது, முன்னாள் புறநகர் மாவட்டச் செய லாளர் சி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் -நாடாளு மன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், மாநிலக்குழு உறுப்பினர்கள் இரா. விஜயராஜன், எஸ். பாலா, சிந்தன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எம். எஸ். முரு கன் ஆகியோர் புகழஞ்சலி செலுத் திப் பேசினர். தோழர் கோடியேரி பாலகிருஷ்ணன் உருவப்படத் திற்கு மாவட்ட செயற்குழு, மாவட் டக்குழு மற்றும் கட்சி உறுப்பி னர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத் தினர். தேனி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தேனி மாவட்டக்குழு அலுவ லகத்தில் அன்னாரது உருவப்படத் திற்கு மாவட்டச் செயலாளர் ஏ.வி. அண்ணாமலை ,மாவட்டச் செயற் குழு உறுப்பினர்கள் டி.வெங்க டேசன் ,சி.முருகன் ,தாலுகா செய லாளர் இ.தர்மர் ,சிஐடியு தலை வர்கள் ஜி .சண்முகம் ,பிச்சை மணி விவசாய சங்க தலைவர் பொன்னுத்துரை ,வி.என்.ராமராஜ் ,வி.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். போடி கட்சி அலுவலகத்தில் மூத்த தலைவர்கள் கே.ராஜப்பன் ,விவசாயிகள் சங்க மாவட்ட தலை வர் எஸ்.கே.பாண்டியன் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தி னர். பெரியகுளத்தில் கட்சி அலுவ லகத்திலும் அஞ்சலி செலுத்தினர்.