தேனி, ஜூலை 2- தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர் தினத்தையொட்டி மருத்துவக்கல்லூரி சிறப்பு இயக்குனர் டாக்டர் மீனாட்சி சுந்தரத்தை பள்ளி மாணவ, மாணவிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது துணை முதல்வர் சுசீலா தங்கம் நிலைய மருத்துவ அலுவலர் சந்திரா மற்றும் கல்வி மெட்ரிக் பள்ளி யின் பொறுப்பாளர்கள் உடனிருந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் உடற்கூறியியல் மற்றும் சட்ட மருத்து வத்துறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மனித உடலின் பாகங்கள் பற்றி அவர்களுக்கு வகுப்பு எடுக்கப்பட்டது. மனித உடலில் உள்ள எலும்புகளையும் வயிற்றில் உள்ள உறுப்புகள் அனைத்தையும் மாணவர்கள் நேரடியாக பார்வையிட்டனர். சட்ட மருத்துவத்துறையில் எந்தவித மான உதவிகளை காவலர்களுக்கு மருத்துவர்கள் செய்கி றார்கள் என்பது பற்றி விரிவாக மாணவர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது. இந்நிகழ்வின் போது உடல்கூறியியல் துறை தலைவர் எழிலரசன், இணை பேராசிரியர் கற்பக ஜோதி, சட்ட மருத்துவத் துறையின் தலைவர் அருண் குமார் ஆகி யோர் உடனிருந்தனர். மாணவ மாணவியர்களுக்கு உடற் கூறியியல் பற்றிய சந்தேகங்கள் அனைத்தும் விளக்கி கூறப்பட்டது.