districts

பேருந்துக்கட்டணம் செலுத்தாததால் மாணவர்களை நடுவழியில் இறக்கிவிட்ட பள்ளி நிர்வாகம்

சின்னாளப்பட்டி.ஜூலை 19- திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்  குண்டு ஒன்றியம் பட்டிவீரன்பட்டியில் என்.எஸ்.வி வி அரசு உதவி பெறும்  ஆரம்பப் பள்ளி உள்ளது. இப்பள்ளி யில் பயிலும் மாணவர் சிவபாலன், ஐந்  தாம் வகுப்பு மாணவி நிவேதா ,3ஆம்  வகுப்பு மாணவி அவந்திகா மற்றும்  நான்காம் வகுப்பு மாணவ மாணவிகள்  பேருந்துக்கு பணம் கட்ட தாமதமாகி யுள்ளது.இதனால் கடந்த செவ் வாய்க்கிழமையன்று பள்ளி பேருந்தி லிருந்து மாணவ, மாணவிகளை வாகன  காப்பாளர் இறக்கி விட்டு சென்றுள்ளார். மாணவ மாணவிகள் ரோட்டில் நின்று  அழுது கொண்டிருந்தபோது அக்கம்பக்  கத்தினர் அவர்கள் பெற்றோர்களிடம்  தகவல் கூறி, ஒப்படைக்கப்பட்டனர். இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது, செயலர் சங்கர பாண்டி கூறுகையில், இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்டவுடன் அந்த வாகன காப்  பாளரை 15 நாள் சஸ்பெண்ட் செய்து விட்டோம். இனிமேலும் இப்படி தவறு கள் நடக்காது என்றார். கண்டனம் மாணவர்களை பாதி வழியில் இறக்கி விட்டு சென்றுள்ளனர். இது அப்பட்டமான மனித உரிமை மீறல் குற்றம் ஆகும். கிராமப்புற பகுதியை சேர்ந்த ஏழை எளிய மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்டு சென்றது மாணவர்களை மனரீதியாக பாதிக்கும் கொடூரமான செயகும். அரசு உதவி பெற்று வரும் ஒரு பள்ளியில் நடை பெற்றுள்ள மனிதாபிமானமற்ற, அராஜ கமான செயலை இந்திய மாணவர் சங்கம் வன்மையாக கன்டிக்கிறது. மாவட்ட கல்வி துறையும், தமிழக அர சும் பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நட வடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கி றோம். தனியார் பள்ளிகள் மற்றும் அரசு  உதவி பெறும் பள்ளிகளில் நடைபெற்று  வரும் இத்தகைய அராஜக செயல்கள்  தொடர்கதையாக உள்ளது. தனியார் பள்ளிகளின் பள்ளி கட்டண வசூலை யும், வேன் கட்டணம் என்ற பெயரில் அராஜகமாக வசூல் செய்வதையும் முறைப்படுத்திட வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கே.முகேஷ், மாவட்டச் செய லாளர் ஜீ.தீபக்ராஜ் ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரிவித் துள்ளனர்.