விருதுநகர்சு, செப்.23- விருதுநகர் நகராட்சி யில் பணிபுரியும் ஒப்பந்த துப்புரவுப் பணியாளர்களு க்கு மாவட்ட ஆட்சியர் உயர்த்திய ஊதியத்தை வழங்கக் கோரி போராட்டம் நடைபெற்றது. விருதுநகர் நகராட்சியில் 60 நிரந்தர துப்புரவுத் தொழி லாளர்களும், 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்த அடிப்ப டையில் பணிபுரியும் துப்புர வுத்தொழிலாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர். ஒப்பந்தத் தொழிலாளர்க ளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஊதியத்தை மாவட்ட ஆட்சி யர் நிர்ணயம் செய்வதுண்டு. அதனடிப்படையில் ஊதி யத்தை உள்ளாட்சி நிர்வாகங் கள் வழங்குவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஊதிய உயர்வை கடந்த ஏப்ரல் மாதம் மாவட்ட ஆட்சி யர் நிர்ணயம் செய்து நக ராட்சிகளுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார். ஆனால், தற்போது வரை அந்த ஊதியம் ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கப்படவில்லை. மேலும் நிரந்தர துப்பு ரவுப் பணியாளர்களுக்கு பிஎப் தொகை வழங்கப்பட வில்லை. இதுகுறித்து நக ராட்சியில் பலமுறை முறை யிட்டும் உரிய நடவடிக்கை இல்லை. எனவே, சிஐடியு- ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலா ளர் ஆர்.பாலசுப்பிரமணி யன், மாவட்ட நிர்வாகி ஆர். விஜயபாண்டி ஆகியோர் தலைமையில் துப்புரவுத் தொழிலாளர்கள் நகராட்சி ஆணையாளரைச் சந்திக்கச் சென்றனர். இருவர் மட்டுமே பேச்சு வார்த்தை நடத்த வர வேண்டும் என ஆணையா ளர் ஸ்டான்லிபாபு கூறி யுள்ளார். இதனால், வெகுண்டெழுந்த தொழிலா ளர்கள் நகராட்சி அலுவல கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அனைவ ரையும் சந்தித்து குறைகளை கேட்க ஆணையாளர் முன் வந்தார். இதனால், போராட் டம் முடிவுக்கு வந்தது.