கண்டுகொள்ளாத அதிமுக கவுன்சிலர் மதுரை, ஜன.29- மதுரை பைக்காரா பகுதி யில் தனியார் ஜவுளிக்கடை யின் உணவு சமைக்கும் கூடத்திலிருந்து கொட்டப் படும் உணவுக்கழிவுகளால் குடியிருப்பு பகுதியில் துர் நாற்றம் வீசி, சுகாதாரச் சீர் கேடு ஏற்பட்டுள்ளது. மதுரை 72 ஆவது வார்டில் சரவணா செல்வரத்தினம் பெரிய ஜவுளிக்கடை உள் ளது. ஜவுளிக்கடையின் பின் புறம் யோகியா நகரில் கடை யில் பணியாற்றும் தொழிலா ளிகளுக்கு உணவு சமைக்கும் கூடம் உள்ளது. இங்கிருந்து கழிவுநீர், உணவுக்கழிவு கள்அருகில் உள்ள காலியி டத்தில் கொட்டப்படுகிறது. இத னால் அப்பகுதி முழுவதும் மிகவும் துர்நாற்றம் வீசி, மக் கள் கடும் அவதிப்படுகின்ற னர். துர்நாற்றம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கி றது. காலை, மாலை நேரங்க ளில் கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளது. பாதாளச் சாக்கடை இருந்தாலும் கழிவு களை அதன்மூலம் வெளி யேற்றாமல், காலியிடத்தில் கொட்டுகிறார்கள். இதுகுறித்து இப்பகுதி மக்கள் அதிகாரிகளிடமும் இந்த வார்டின் அதிமுக மாமன்ற உறுப்பினர் கருப்பசாமியிட மும் முறையிட்டும் எந்த நட வடிக்கையும் மேற்கொள்ள வில்லை என்று வேதனை யுடன் கூறுகிறார்கள்.