districts

img

மோடி ஆட்சி தொடரக்கூடாது என மக்கள் தீர்ப்பு சு.வெங்கடேசன் பேட்டி

வெற்றிபெற்ற சு.வெங்கடேசன் அளித்த பேட்டியில் “எனக்கு கிடைத்த வெற்றி என்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு கிடைத்த வெற்றி. இந்தியா கூட்டணியின் அரசியல் நிலைப்பாட்டிற்கு கிடைத்துள்ள வெற்றியாக கருதுகிறேன். 2019 நாடாளுமன்ற தேர்தலை விட 3 இல் 1 பங்கு வாக்கு கூடுதலாக கிடைத்துள் ளது. மதுரை மக்களின் அரசியல் உறுதி மிக்க வெளிப்பாட்டை காட்டுகிறது. தமிழகம் முழுவதும் பதிவான வாக்கு களில் 50 சதவீத வாக்குகளை இந்தியா  கூட்டணி பெற்றுள்ளது.  அரசியல் வரலாற்றில் மிக முக்கிய செய்தியாக உள்ளது. இந்தியா முழுக்க உள்ள அரசியல் சூழலில் தமிழ்நாடு மிக வலிமையாக உள்ளது. ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு அரசியல் முக்கியத்துவம் இருக்கும். 2024 தேர்தலின் தாக்கம் 2026 இல் இருக்கும். இந்தியாவில் மோடி ஆட்சி தொடரக்கூடாது என்பதற்காக மக்கள் தீர்ப்பளித்துள்ளனர். மக்கள் தீர்ப்பின் அரசியல் உள்ளடக்கத்தை இந்தியா கூட்டணியின் தலைவர்கள் நிறை வேற்றுவார்கள்” என்று கூறினார், அமைச்சர் மூர்த்தி கூறுகையில் “தமிழகத்தில் மூன்றாண்டு காலமாக திமுக செய்துள்ள சாதனைகளுக்காக மிகப்பெரிய வெற்றியை மக்கள் தந்துள்ளனர். மேலூர், மதுரை கிழக்கில் 1 இலட்சம் வாக்குகள் பெற்றுத்  தருவோம் என கூறினேன், அதன்படி 1 லட்சத்திற்கு அதிகமான வாக்குகள் பெற்றுத் தந்துள்ளோம். இந்தியா கூட்டணியில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்காக மக்கள் மக்கள் வாக்களித்துள்ளனர் “ என கூறினார்.

தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி. டி.ஆர். பழனி வேல் தியாகராஜன், சு.வெங்கடே சனுக்கு வாழ்த்து தெரிவித்து இனிப்பு ஊட்டினார்.

தாரை தப்பட்டைகள் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திருவள்ளுவர் சிலை அருகே கூட்டணிக் கட்சிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சர் மூர்த்தி, மாநகர் மாவட்டச் செயலாளரும் வடக்கு சட்டமன்ற உறுப்பினரும் கோ.தளபதி மற்றும் கூட்டணிக்கட்சி தலைவர்கள், மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் ,சு.வெங்கடேசனுக்கு சால்வை, மாலை அணிவித்து மலர்தூவி வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

சிபிஎம் மதுரை மாவட்டக்குழு அலுவலகத்தில் உள்ள தூக்குமேடை தியாகி பாலு சிலைக்கு கட்சி தலைவர்கள் முன்னிலையில் சு.வெங்கடேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

;