திண்டுக்கல், ஜுலை 5- வடமதுரை அருகேயுள்ள 100 ஆண்டு களுக்கு பிறகு நடைபெற்ற மாலை தாண்டும் திருவிழாவில் காளைகளுக்கான ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்றன. அது பற்றிய விவரம் வருமாறு. திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள சேர்வைக்காரன்பட்டியில் ஸ்ரீ பொம்மையபெருமாள், ஸ்ரீ பெத்தக்கம் மாள் கோவில் திருவிழா கடந்த ஞாயிற் றுக்கிழமையன்று தொடங்கியது. 100 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற இந்த திருவிழா அப்பகுதி கிராமத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான “மாலை தாண்டும் திருவிழா” என்ற காளை களுக்கான ஓட்டப்பந்தய போட்டி நடந்தது. இதில் 200-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொண்டன. உருமி ஓசை முழங்கி யதும், காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. காளைகள் சீறிப்பாய்ந்து எல்லைக் கோட்டை நோக்கி ஓடின. எல்லைக் கோட்டை கடந்து சென்ற காளைகள் மீது மஞ்சள்பொடி தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். கரும்பும் கொழுக்கட்டையுமே பரிசு இதில் முதலிடம் பிடித்த கரூர் மாவட்டம் வில்வமரத்துப் பட்டியை சேர்ந்த கடு தூர் மாதா நாயக்கர் காளைக்கு பாரம்பரிய முறைப்படி எலுமிச்சம் பழம், மஞ்சள் பொடி, கரும்பு மற்றும் கொழுக்கட்டை களை பரிசாக வழங்கப்பட்டது. இவ்விழா வில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த நூற்றுக்க ணக்கான கிராம மக்கள் கலந்து கொண்ட னர். (ந.நி.)