districts

img

பணி நேரங்களில் விபத்துகளை தவிர்க்க அரசு பேருந்துகளை கூடுதலாக இயக்குக!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்  மதுரை, செப்.5-  பணி நேரங்களில் அரசு பேருந்துகளை கூடுதலாக இயக்  கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெத்தானியாபுரம், அண்ணா மெயின் வீதியில் மதுரை  மாநகர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கு - 1, மத்திய - 1 பகுதிக்  குழுக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு, மத்திய - 1 ஆம் பகுதிக் குழு செயலாளர் வை.ஸ்டாலின் தலைமை வகித் தார். மாவட்டச் செயற்குழு உறுப்  பினர் ஜா.நரசிம்மன் துவக்கி வைத்துப் பேசினார். மேற்கு - 1 ஆம் பகுதிக் குழுச் செயலா ளர் கு.கணேசன், பகுதிக் குழு  உறுப்பினர் ஜி.சுதாராணி ஆகி யோர் விளக்கிப் பேசினார். மாவட்டச் செயலாளர் மா.கணேசன் நிறைவுரையாற்றினார்.  ஆர்ப்பாட்டத்தில், மாநிலக்குழு உறுப்பினர் இரா.விஜயராஜன்,  மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஏ. பாண்டி, பி.மல்லிகா, ஏ.பி.சிவ ராமன், மாமன்ற உறுப்பினர் வை. ஜென்னியம்மாள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  ஆர்ப்பாட்டத்தில், பேருந்திலி ருந்து தவறிவிழுந்து பலியான 9-ஆம் வகுப்பு பள்ளி மாணவன்  குடும்பத்திற்கு நிவாரண உத வித்தொகை வழங்கிட வேண்டும், பணி நேரங்களில் விபத்துகளை தடுக்க அரசு பேருந்துகளை கூடுத லாக இயக்க வேண்டும், போக்கு வரத்து காவல்துறை மாணவர்  கள், பொதுமக்கள் நலன்கருதி  போக்குவரத்து நெருக்கடியான நேரத்தில் முறையாக போக்கு வரத்தை முறைப்படுத்த வேண் டும், தேவையான இடங்களில் சிக்னல் அமைத்திட வேண்டும், குரு தியேட்டர் சந்திப்பு அருகில் போக்குவரத்து நெருக்கடியை ஏற்படுத்தும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், நகரின் முக்கிய சாலைகள் மற்றும் தெருச் சாலை களை உடனடியாக சீரமைக்க வேண்டும் என முழக்கங்கள் எழுப் பப்பட்டன.