districts

img

நெல்லையில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்காமல் ரூ.3 கோடியில் சைக்கிள் பயணத்துக்கு தனி பாதை

திருநெல்வேலி, டிச.5- நெல்லை மாநகரில் சேதமடைந்த சாலை களை சீரமைக்காமல் சைக்கிள் பய ணத்துக்கு தனி பாதை அமைப்பதா என்று பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். குண்டும்-குழியுமான சாலைகள் நெல்லை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடை பெற்று வருகிறது. மாநகராட்சி அதிகாரி கள் திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வரு கின்றனர். பாதாள சாக்கடை மற்றும் அரிய நாயகிபுரம் குடிநீர் திட்டப்பணிகளுக்காக மாநகரம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலைகளை தோண்டி அடியில் குழாய்கள் பதிக்கப்பட்டன. ஆனால் 2 ஆண்டுகள் ஆகி யும் இந்த சாலைகள் சீரமைக்கப்படாமல் உள்ளது.இதனால் குண்டும்-குழியுமான சாலையில் வாகன ஓட்டிகள் மிகவும் சிர மப்பட்டு செல்கின்றனர். குறிப்பாக, அந்த சாலையில் பயணிக்கும் முதியோர், கர்ப் பிணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி றார்கள். இதற்கிடையே, பாளையங்கோட்டை யில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சைக்கிள் பயணம் செய்வதற்கு என்று ரூ.2 கோடியே 84 லட்சம் செலவில் தனியாக பாதை அமைத்து உள்ளனர்.

அங்குள்ள என்.ஜி.ஓ. காலனி யில் குளத்து சாலை, புதிய காலனி விரி வாக்க சாலை, கல்யாண மண்டப ரோடு ஆகிய பகுதிகளில் குறுகிய பாதையாக அமைக்கப்பட்டு உள்ளது. சில இடங்களில் சாலையை ஒட்டியும், சாலையில் இருந்து தள்ளியும் அமைக்கப்பட்டு இருக்கிறது.  கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட இந்த பணி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. அந்த பாதையின் உள்ளே வேறு யாரும் சென்று விடாதபடி பிளாஸ்டிக் தடுப்புகள் பொருத்தப்பட்டு வருகின்றன. ஆனால் அந்த பாதையில் `வாகன நிறுத்தம் போல் வாகனங்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. கால்நடைகளும் படுத்து ஓய்வு எடுக்கின் றன. நெல்லை மாநகரில் ஒருபுறம் சாலை கள் சேதமடைந்து கிடக்கும் நிலையில் அவற்றை சீரமைக்காமல், சைக்கிள் பாதைக்கு என்று பணத்தை வீணாக செல வழித்து உள்ளார்களே என்று சமூக ஆர்வ லர்களும், பொதுமக்களும் அதிருப்தி தெரி வித்து உள்ளனர்.  இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-  தற்போது அமைத்துள்ள பாதையில் ஒரு வழிப்பாதை போல் சைக்கிளில் செல்ல முடியும். எதிரே யாரும் வரமுடியாது. சைக் கிளில் நிலை தடுமாறுகிறவர்கள் அருகில் உள்ள பள்ளத்தில் அல்லது பிளாஸ்டிக் தடுப்புகள் மீது விழும் வாய்ப்பு உள்ளது. அப்போது சைக்கிளில் செல்பவர்கள் காயம் அடைவதுடன், பிளாஸ்டிக் தடுப்பு களும் சேதம் அடைந்து காணாமல் போகும் நிலை உள்ளது. சாலைகளை தரமாக அக லப்படுத்தி கொடுத்தால் அதில் சைக்கி ளில் செல்வோர் பாதுகாப்பாக சென்று விடு வார்கள். காலி இடங்கள், பூங்கா பகுதி களில் இவ்வாறு பாதை அமைத்தால் நடை பயிற்சி, சைக்கிளில் செல்வோருக்கு பயன் உள்ளதாக இருக்கும். நெல்லையில் டவுன், சந்திப்பு, பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சேதமடைந்து காணப்படும் சாலைகளை உடனடியாக சீரமைக்க முன்னுரிமை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

;