districts

img

பழனி முருகன் கோவிலில் இருந்து குறிஞ்சியாண்டவர் கோவிலுக்கு ரோப் கார்

திண்டுக்கல், ஜுலை 4- பழனி முருகன் கோவில் அடி வாரத்திலிருந்து கொடைக்கானலில் உள்ள குறிஞ்சியாண்டவர் கோவி லுக்கு ரோப் கார் திட்டம் தொடங்க  உள்ளதாக மாநில நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரி வித்துள்ளார்.  திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நெடுஞ்சாலைத்துறை தொடர்பாக ஆய்வுக்கூட்டம் நடை பெற்றது. இதில் கலந்து கொண்ட  அமைச்சர் எ.வ.வேலு செய்தியா ளர்களிடம் கூறுகையில், ரோப்கார் திட்  டம் தொடர்பாக ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்தோம். செய்து தரு வதாக கூறியிருக்கிறார்கள். இது தொடர்பாக ஒன்றிய அரசு அதிகாரிகள் கள ஆய்வு நடத்தியுள்ளனர். தில்லி செல்லும் பொழுது இந்த திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்துவோம். அடுக்கம் சாலையில் மண் சரிவு என்பது யாரும் திட்டமிட்டு சரிக்கிறது இல்லை. மண் வளத்தை பொறுத்தது.  மழை நேரங்களில் கொடைக்கானல் மற்றும் ஊட்டியில், திருவண்ணாமலை யில் யமுனாமுத்தூர் என்று ஒரு மலை  இருக்கிறது. மண் சரிவு ஏற்படுவ தில்லை. மண்ணின் உறுதித்தன்மை குறைவதால் தான் இந்த மண் சரிவு  ஏற்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண  வேண்டும். சுற்றுச்சுவர் கட்டுவதன் மூல மாக மண்சரிவை நிறுத்த முடியும். ஊட்டி யில் புதிய டெக்னாலஜி மூலம் தில்லி ஐஐடி பேராசிரியர் ஒருவரை வைத்து 3 இடத்தில் சுற்றுச்சுவர் கட்டினோம். அதன் பிறகு 2 மழை பெய்துள்ளது. அந்த 2 மழையில் அந்த இடத்தில் மண் சரிவு ஏற்படவில்லை. அதன்படி இந்த ஆண்டு கொடைக்கானலில் எங்  கெங்கு மண் சரிவு உள்ளதோ அங்கு  பரீட்சார்த்தமாக செய்யலாம் என்று முடிவு செய்துளோம். அது சக்சஸ் ஆனால் அதை தொடரலாம் என்று உள்ளோம். கொடைக்கானல் போன்ற  பகுதியில் கொண்டை ஊசி வளைவு களில் வண்டிகள் கவிழ்கின்றன. வெளி நாடுகளில் ரோலர் பேரிங் சிஸ்டம் என்று  ஒரு சிஸ்டம் உள்ளது. இதை கொண்டை  ஊசி வளைவுகளில் கான்கிரிட் போட்டு  பிக்ஸ் செய்துவிடுவார்கள். வண்டி வேகமாக வந்து மோதினால் கவிழாது. இந்த சிஸ்டம் வண்டியை திருப்பி  மீண்டும் தார் ரோட்டில் கொண்டு வந்து  விட்டு விடும். ஊட்டியில் 2 இடங்க ளில் அந்த சிஸ்டத்தை அமைத்துள் ளோம். 2 மாதத்திற்கு முன்பு சென்று பார்த்து வந்தோம். அது நியூ டெக்னா லஜி தான். வெளிநாடுகளில் உள்ளது.  அதை கொடைக்கானலில் பரீட்சார்த்த மாக செய்ய உள்ளோம் என்றார்.  இப்பேட்டியின் போது அமைச்  சர்கள் இ.பெரியசாமி, அர.சக்கர பாணி, சட்டமன்ற உறுப்பினர்கள் இ.பெ.செந்தில்குமார், ச.காந்தி ராஜன், திண்டுக்கல் மேயர் இளமதி  ஜோதிபிரகாஷ், துணை மேயர்  ராஜப்பா, திண்டுக்கல் ஆட்சியர் பூங்  கொடி உள்ளிட்ட பலர் உடனிருந்த னர். மேலும் கலைஞர் நூற்றாண்டை யொட்டி தோமையார்புரம் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ.வேலு மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.                   (ந.நி.)

;