சிவகங்கை, ஜூலை 2- சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா கானூர் ஏந்தல் , பெத்தானேந்தல். மணல்மேடு பகுதிகளில் மணல் கொள்ளை நடப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.கே. தண்டியப்பன் மனு அளித்துள்ளார். அவர் அளித்த மனுவில் மேலும் கூறி யிருப்பதாவது: மணல் கொள்ளை நடப்ப தால் இப்பகுதியில் கரும்பு சாகுபடி பாதிக் கப்படுகிறது. குடிநீர் திட்டங்கள் நாசமா கும் அபாயம் உள்ளது. மணல் கடத்தலில் ஈடுபடுகிற சமூக விரோத சக்திகள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். மணல் அள்ளுவதால் இப்பகுதியில் இருக்கக்கூடிய ஆழ்குழாய் கிணறுகளில் நீர்வற்றிப் போகிறது. கூட்டுக்குடிநீர் திட்டங்களில் நீர் ஆதாரம் பாதிப்படையும் அபாயம் உள்ளது. இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் உரிய நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும் கிரா மங்கள், நகர்ப்புறங்களில் உயிரிழந்த வர்களின் இறப்பு சான்று பதிவு செய்யாமல் விடுபட்டுள்ளது. இறப்பு சான்று பதிவு செய்வது தொடர்பாக 3000-க்கும் மேற்பட்ட மனுக்கள் சிவகங்கை கோட்டாட்சியர் அலு வலகத்தில் தேங்கிக்கிடக்கின்றன. 3 ஆண்டுகளாக இதே நிலைமை தொடர்கி றது. இறப்பு சான்றிதழ் பெற முடியாத கார ணத்தினால் குடும்பத்துக்குள் பிரச்சனை ஏற்படுகிறது. சொத்துக்களை பிரித்துக் கொடுப்பதில் தகராறு ஏற்படுகிறது. மாவட்ட ஆட்சித் தலைவர் தலையிட்டு உடனே நடவடிக்கை மேற்கொள்ள வேண் டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.