தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் அருகே கீழக்குறிச்சி ஊராட்சி மண்டலக்கோட்டை தூய இருதய மாதா ஆலய வளாகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்பில் கட்டப்பட்ட, பழமையான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. கட்டப்பட்டு நீண்ட நாட்கள் ஆன நிலையில் பழுதடைந்து தூண்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. விபத்து நிகழும் முன் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.