சின்னாளபட்டி, அக்.7- திண்டுக்கல் மாவட்டம், வத்தலக் குண்டுவில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதுதொடர்பாக பொது மக்கள் புகார் செய்ததை தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.அதை தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் சற்று குறைந்தது. ஆனால் முழுமையாக போக்குவரத்து நெரிசல் குறைய வில்லை. வத்தலக்குண்டு நெடுஞ் சாலையில் பல இடங்களில் மின் கம்பங்கள் சாலை நடுவில் இருப்பதே நெரிசலுக்கு முக்கிய காரணம் என்று மக்கள் தெரிவிக்கின்றனர். சாலை நடுவே உள்ள மின்கம்பங்களை சாலையோர மாக மாற்றியமைக்க வேண்டும். அப்போதுதான் நெரிசல் முழுமையாக தீரும். எனவே நெடுஞ்சாலைத்துறையினர், மற்றும் மின்வாரியத்தினர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.