districts

img

பொதுப்பணி-நீர்வளத்துறையில் 6 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை

மதுரை, அக்.8- தமிழ்நாடு அரசு பொதுப் பணித்துறை-கணக்கு மற்றும் ஆட்சிப்பணியாளர் சங்கத்தின் மாநில கருத்த ரங்கம் மதுரையில் சனிக்கிழ மையன்று நடைபெற்றது. இதில் சங்கத்தின் நிர்வாகி கள் அப்துல் நஜ்முதீன், மை. திருச்செல்வம் ஆகியோர் சனிக்கிழமையன்று செய்தியா ளர்களைச் சந்தித்தனர். அப்  போது அவர்கள் கூறியதாவது: தமிழ்நாடு அரசு தேர்வா ணையம் நோடி நியமனத்தில் மூலம் விலக்கிக் கொண்ட 250 உதவியாளர்களுக்கான காலிப்பணியிடங்களை பொதுப் பணித்துறை திரும்பப் பெற்று தகுதி வாய்ந்த இள நிலை உதவியாளர்கள் மற்  றும் தட்டச்சர்களை பதவி  உயர்வின் மூலம் உதவியா ளர்களாக நியமனம் செய்ய வேண்டும். பொதுப்பணித்துறை யில் 2017-ஆம் ஆண்டு மற்றும் அதற்குப்பின் பணியில் சேர்ந்து எல்லாத் தகுதிகளும் பெற்று பதவி உயர்வுக்காக அதிக எண்ணிக்கையில் காத்திருக்கும் இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச் சர்கள் பதவி உயர்வு 5 ஆண்டு களுக்கு மேல் தள்ளிப் போகும் சூழல் உள்ளது. எனவே அர சாணை எண் 109-ஐ விலக்கி இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச்சர்களை பதவி உயர்வின் மூலமாக மட்டுமே உதவியாளர்களாக நியமிக்க வேண்டும். பொதுப்பணி மற்றும் நீர்வளத்துறையில் காலி யாக உள்ள அமைச்சுப் பணி யாளர்கள், அலுவலக உதவி யாளர்கள், வேலை நிதி பணி யாளர்கள் மற்றும் ஓட்டுநர்  கள் உள்ளிட்ட 6 ஆயிரத்திற்  கும் மேற்பட்ட காலிப்பணி யிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் தமிழக அரசில் பணிபுரி யும் பல்வேறு துறை ஊழி யர்களுக்கு நடைமுறையில் உள்ளது போல் , பொதுப் பணித்துறையில் மற்றும் நீர்  வளத்துறை ஊழியர்களுக் கும் கலந்தாய்வு மூலம் பணி யிட மாறுதல் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரி வித்தனர்.  கருத்தரங்கில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் ஆ. செல்வம், மதுரை மாவட்ட செய லாளர் ௧.நீதிராஜன், ஆர்.  சிவக்குமார், மேனகா உள்  ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

;