districts

மதுரை மாநகரில் கூடுதலாக அரசு பேருந்துகள் இயக்கிடுக!

சிஐடியு வலியுறுத்தல்


மதுரை,ஜூலை 7- மதுரை மாநகரில் கூடுதலாக அரசு பேருந்துகள் இயக்க வேண்டும். பழுதடைந்த பேருந்து களை வழித்தடங்களில் இருந்து நீக்கி புதிய பேருந்துகளை இயக்க வேண்டும் என்று சிஐடியு மதுரை மாநகர் மாவட்டக் குழு வலியுறுத்தி யுள்ளது. இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) மதுரை மாநகர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் ஜூலை 6 அன்று மாவட்ட தலைவர் இரா. தெய்வராஜ் தலைமையில் நடை பெற்றது. மாநில உதவித் தலைவர் எம்.மகாலெட்சுமி, மாவட்டச் செய லாளர் இரா.லெனின், மாவட்ட பொ ருளாளர் ஜெ.லூர்துரூபி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்க் கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.  மதுரை மாநகர் மக்கள் போக்கு வரத்து பயணத்திற்கு பெரிதும் பயன்படுத்துவது பேருந்து போக்கு வரத்து ஆகும். மதுரை நகரில் நகர் பேருந்துகளை அரசு மட்டுமே இயக்கும் உரிமை பெற்றதாகும். அரசு போக்குவரத்து கழகம், மதுரை மண்டலத்தின் சார்பாக 650-க்கும் மேற்பட்ட நகர் பேருந்து கள் மாவட்டத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் கட்டணமில்லா பேருந்து, எக்ஸ்பிரஸ் பேருந்து, தாழ்தள பேருந்து, குளிர்சாதன பேருந்து என பல வகைகளில் பேருந்துகள் இயங்கி வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக  இயக் கப்பட்ட பேருந்துகளின் எண்ணிக் கை அதிகரிக்கப்படவில்லை. புதிய வழித்தடங்களும் உரு வாக்கப்படவில்லை. தற்போது மதுரை மாநகரின் மக்கள் தொகை 14 லட்சமாகும். இது 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட கூடுதலானதாகும். மேலும் மகளிருக்கு கட்டண மில்லா பேருந்துகள் கடந்த 2 ஆண்டுகளாக இயக்கப்பட்டு வருவதால் பயணிகளின் எண்ணிக் கையும் அதிகரித்துள்ளது. இதற்கு தகுந்தாற்போல் பேருந்துகள் எண்ணிக்கை கூடுதலாக்கப்பட வில்லை. வழித்தடங்கள் அதிகரிக் கப்படவில்லை.

மேலும் ஓடுகின்ற பேருந்துக ளில் 9 ஆண்டுகளை தாண்டி 500க்கும் மேற்பட்ட பேருந்துகள் பழைய பேருந்துகளாக இயங்கி வருகின்றன. பேருந்தை தயாரித்த நிறுவ னங்கள் ஒரு பேருந்து வழித் தடத்தில் இயக்கப்படுகின்ற காலத்திலிருந்து, 9 ஆண்டுகள் அல்லது 12 லட்சம் கிலோமீட்டர் மட்டுமே, இதில் எது முந்தையதோ அதுவரை இயக்கலாம் என தனது வரைமுறையில் தெரிவித் துள்ளது. ஆனால் இதற்கு மாறாக 9 ஆண்டுகள் கடந்தும் பேருந்து கள் இயக்கப்பட்டு வருகின்றன. பேருந்துகள் பலவற்றில் கூண்டு பழுதாகியுள்ளது. மழை பெய்யும் போது மழை நீர் பேருந் தின் மேற்கூரையிலிருந்து கசிந்து பயணிகள் நனைந்து கொண்டே பயணம் செய்யும் நிலை உள்ளது. ஜன்னல்கள், இருக்கைகள் பழுத டைந்ததால் பயணிகளுக்கு பாது காப்பற்ற முறையில் இருந்து வரு கிறது. இதற்கு மேல் வழித்தடத் தில் இயங்குகின்ற பேருந்து கள் முழுமையாக இயக்கப்படு வதில்லை.  ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பற்றாக்குறையால், குறிப்பாக மாலை நேரத்தில் பேருந்துகள் இயக்கம் குறைக்கப்படுகிறது. இதன் காரணமாக பேருந்து நிறுத்தங்களில் ஏராளமான பயணி கள் பல மணிநேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. பள்ளி, கல்லூரி நேரங்களிலும், அலுவலக நேரங்களிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால் ஓடுகின்ற பேருந்துகளில் கொள்ளளவிற்கும் மேல் பயணிகள் படிக்கட்டுகளில் தொங்கி பயணம் செய்வதையும் காண முடிகிறது. எனவே, தமிழக அரசு உடனடி யாக மதுரை மண்டலத்திற்கு புதி தாக பேருந்துகள் வழங்க வேண்டும்.. மக்கள் நெரிசலுக்கு உகந்தவாறு கூடுதல் பேருந்து களை வழித்தடத்தில் இயக்க  வேண்டும் என்று மதுரை போக்கு வரத்து கழக நிர்வாகத்தையும், தமிழக அரசையும் சிஐடியு வலி யுறுத்துகிறது.

;