விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம், பண்ணைமூன்றடைப்பு கிராமத்தில் மணிகண்டன் என்பவர் கடந்த ஜூன் 11 அன்று இடி மின்னல் தாக்கியதில் உயிரிழந்தார். இந்நிலையில், அவருடைய குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரண நிதியை தமிழக நிதி-மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.