தேனி: 93.17% பேர் தேர்ச்சி
தேனி, மே 8- தேனி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 147 பள்ளிகளைச் சேர்ந்த 93.17 சதவீதம் மாணவ, மாணவி கள் தேர்ச்சி பெற்றனர். மாவட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை 147 அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 7,047 மாணவர்கள், 6,870 மாணவிகள் என மொத்தம் 13, 917 பேர் எழுதினர். இதில், 6,350 மாணவர்கள், 6,616 மாணவி கள் என மொத்தம் 12,966 பேர் (93.17 சதவீதம்) தேர்ச்சி பெற்றனர். 951 பேர் தேர்ச்சி பெறவில்லை. மாணவர்களில் 90.11 சதவீதம் பேரும், மாணவிகளில் 9.30 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றனர். மாவட்டத்தில் மொத்தம் 70 அரசு பள்ளிகளைச் சேர்ந்த 5,586 பேர் தேர்வு எழுதியதில், 88.29 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்தமுள்ள 146 பள்ளிகளில் எட்டு அரசுப் பள்ளிகள், ஐந்து அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், 35 தனியார் பள்ளிகள் என 46 பள்ளிகளில் 100 சத வீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேனி மாவட்டம் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி விகி தத்தில் மாநில அளவில் 22-வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு பொதுத் தேர்வில் 94 சத வீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று, மாநில அள வில் 18-வது இடத்தை பிடித்திருந்தது.
இராமநாதபுரம்: 96.30 சதவீதம் பேர் தேர்ச்சி
இராமநாதபுரம், மே 8- இராமநாதபுரம் மாவட்டத்தில் 6,790 மாணவர்கள், 7,516 மாணவிகள் என மொத்தம் 14,306 மாணவ, மாணவி கள் தேர்வு எழுதியிருந்தனர். தேர்வு முடிவுகள் வெளி யான நிலையில் மாணவர்கள் 6,413 பேர் (94.45 சதவீதம்) தேர்ச்சி பெற்றுள்ளனர். 94.45 சதவீதம் தேர்ச்சி அடைந் துள்ளனர். மாணவிகள் 7,364 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் (97.98 சதவீதம்) மாவட்ட அளவில் 96.30 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தில் 70 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 18 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியை காட்டியுள்ளன. அரசு உதவிபெறும் 37 மேல்நிலைப்பள்ளிகளில் எட்டுப் பள்ளி கள் 100 சதவீத தேர்ச்சியை காட்டியுள்ளன. 53 மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளில் 47 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி யைக் காட்டியுள்ளன.
பிளஸ் 2 தேர்வில் தேவாங்கர், விக்டரி பள்ளிகள் சாதனை
சின்னாளபட்டி, மே 8- பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி தேவாங்கர் அரசு உதவி பெறும் பள்ளி மாணவி ராஜேஸ்வரி மாணவி 569 மதிப்பெண் பெற்று முதல் இடத்தையும் காயத்ரி என்ற மாணவி 558 மதிப்பெண்கள் பெற்று இரண் டாம் இடத்தையும் லாவண்யா என்ற மாணவி 549 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத் தையும் பிடித்துள்ளனர் வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளியின் செயலர் ராகவன் தலைவர் பெத்தண்ணசாமி தலைமை ஆசி ரியர் ஞானசேகரன் ஆகியோர் பாராட்டினர். விக்டரி மெட்ரிக் பள்ளி மாணவி ஹரிணி 514 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை யும் கிஷோர் என்ற மாணவர் 456 மதிப் பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவ மாண விகளை பள்ளியின் தாளாளர் ரவீந்திரன், முதல்வர் மலர்விழி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
ஒட்டன்சத்திரம் அருகே மினி லாரி மோதி தம்பதி பலி
னிலாரி மோதியதில் தம்பதி பலினார்கள். திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் நவாமரத்துப்பட்டியைச் சேர்ந்த விவசாயி பழனிச்சாமி (65), இவரது மனைவி வேம்பாயி (55) இருவரும் தனது சொந்த ஊரான ஒட்டன்சத்திரம் அருகே உள்ள லெக்கை யன்கோட்டைக்கு செல்வதற்காக நேற்று மாலை இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டுச்சென்றனர். திண்டுக்கல்-ஒட்டன்சத்திரம் சாலையில் லெக்கை யன்கோட்டையில் சென்று கொண்டீருந்தபோது எதிரே வந்த மினி லாரி மோதியதில் பழனிச்சாமி, வேம்பாயி உயிரி ழந்தார். ஒட்டன்சத்திரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் கூலித் தொழிலாளி பலி
தேனி, மே 8- போடியில் சாலை தடுப்புச்சுவரில் இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் காயமடைந்த கூலித் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தார். போடி ஜமீன் தோப்பு தெருவை சேர்ந்தவர் நல்லகாமு மகன் காமராஜ் (35). இவர் வெள்ளிக்கிழமை (மே 5) போடி கீழத்தெருவை சேர்ந்த கணேசன் மகன் கருப்பையா (34) என்பவரை தனது இரு சக்கர வாகனத்தில் போடி தேனி சாலையில் சென்றுள்ளார். போடி சாலைக் காளி யம்மன் கோவில் அருகே சென்றபோது சாலையின் நடு வில் உள்ள தடுப்புச் சுவரில் இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காமராஜ் மற்றும் கருப்பையா பலத்த காயமடைந்தனர். காமராஜ் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையிலும், கருப்பையா போடி அரசு மருத்துவமனை யிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் ஞாயிற் றுக்கிழமை இரவு காமராஜ் சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தார். போடி நகர் காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.
பிஎஸ்என்ஏ கல்லூரியில் வாகன கண்காட்சி
திண்டுக்கல், மே 8- திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. பொறியியற் கல்லூரியில் எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக் என்ஜினியரிங் பிரிவுகள் மற்றும் ஏ.ஆர்-4 பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இணைந்து எலக்ட்ரிக் வாகனக் கண்காட்சியை நடத்தின. இந்தக் கண்காட்சியில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் காட்சிப் படுத்தப்பட்டிருந்தன. விவசாயத் துறைக்குப் பயன்படுத்தப்படும் டிராக்டர், மருந்தடிக்கும் டிரோன் களும் இடம் பெற்றிருந்தன. அதன் செயல்பாடுகள் செய்து காட்டப்பட்டன. இந்தியத் திறன் மேம்பாடு, மற்றும் தொழில் முனை வோர் அமைச்சகத்தின் அறிவுரையின்படி அடுத்த பத்தாண்டுகளில் 20 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு அதிகமான வேலை வாய்ப்பு கிடைக்கப் போவதாக கூறப்படுகிறது. எலக்ட்ரிக்கல் மற்றும் என்ஜினியரிங் மாணவ, மாணவிகளுக்கு மின்சார வாகனத் தொழிலில் அதிக வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன என கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இந்த நிகழ்வில் பி.எஸ்.என்.ஏ. பொறியியற் கல்லூரி யின் முதன்மை தலைவர் ஆர்.எஸ்.கே.ரகுராம், கல்லூரி முதல்வர் முனைவர் டி.வாசுதேவன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கல்லூரி முதன்மை தலைவர் ஆர்.எஸ்.கே.ரகுராம் எலக்ட்ரிக் பைக், சோலார் டிராக்டர் ஆகியவற்றை ஓட்டிப்பார்த்தார்.
பொன்னம்பட்டியில் ஜல்லிக்கட்டு: 16 பேர் காயம்
புதுக்கோட்டை, மே 8- புதுக்கோட்டை நகரக் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பொன்னம்பட்டி ஓட்டகுளத்தில், கரண செல்ல அய்யனார் கோவில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி ஞாயிறன்று நடைபெற்றது. மாநில சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்ய நாதன், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்து ராஜா ஆகியோர் போட்டியைத் தொடங்கி வைத்தனர். போட்டியில், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, சிவ கங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த 586 காளைகள் கலந்து கொண்டன. இதில், 186 மாடுபிடி வீரர்கள் களமிறங்கினர். வெற்றி பெற்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரர் களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. 6 மாடு பிடி வீரர் களும் 10 பார்வையாளர்களும் காயமடைந்தனர். இவர் களில் 4 பேர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
தூய்மைப் பணி தனியார்மயத்தை கண்டித்து வேலை நிறுத்தம்
திருச்சிராப்பள்ளி, மே 8- திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சியில் தூய்மைப் பணி தனியார்மயத்தை கண்டித்தும், நாள் ஒன்றுக்கு ஆண்களுக்கு ரூ.400, பெண்களுக்கு ரூ.350 என தினக்கூலி நிர்ணயித்தது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தியும் தூய்மைப் பணியாளர்கள் நக ராட்சி அலுவலகம் முன்பு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், நகராட்சி அதிகாரிகள் தலைமையில் நடை பெற்ற பேச்சுவார்த்தையில், ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை மாவட்டச் செயலாளர் பன்னீர்செல்வம், விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலப் பொருளாளர் பழனிச்சாமி, சிபிஎம் லால்குடி ஒன்றியச் செயலாளர் (பொ) பாலு, கவுன்சிலர் சாரதாதேவி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் திருச்சி மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில் காண்ட்ராக்ட் முறை அமல்படுத்தி, ஊதியம் நிர்ணயிக்கும் வரை இங்கு ஊதியத்தை குறைக்க மாட்டோம். ஆட் குறைப்பு செய்ய மாட்டோம் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் பி.காம் பாடப்பிரிவில் போட்டி கடுமையாக இருக்கும்
மதுரை, மே 8- நான்கு முக்கிய பாடங்களில் அதிக மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றுள்ளதால் வணிகவியல் பாடப்பிரி வில் போட்டி கடுமையாக இருக்கும். கல்லூரிகளில் பி.காம் மற்றும் அது சார்ந்த பாடங்களுக்கு அதிக கட்-ஆஃப் இருக்கும். என்கின்றனர் கல்வியாளர்கள். வணிகவியலில் 5,678 பேர் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர், கணக்குப் பதி வியல்- 6,573, வணிகக் கணிதம்-1,334, பொருளியல்- 1,760, கணினி பயன்பாடு- 4,051 பேரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர், வணிகவியல் பாடப்பிரிவுகளில் கட் ஆஃப் அதிகம் விரும்பப்படும். சில கல்லூரி களில் 100-க்கு 100 ஆகக் கூட இருக்க லாம். அல்லது கட்-ஆப் 97-98 சதவீமாக இருக்கலாம். பி.காம் படிப்புக்கான கட் ஆப் 96 சதவீதத்திற்குக் குறையாது. வேதியியல் மற்றும் உயிரியலில் கணி சமான மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். முற்றிலும் அறிவியல் சார்ந்த படிப்புகள், மீன்வள அறிவியல், கால்நடை அறிவியல் மற்றும் நர்சிங் படிப்புகளுக்கான கட்-ஆஃப் அதி கரிக்கும். கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியலுக்கான சிபிஎஸ்இ வினாத் தாள்கள் சவாலாக இருந்ததால், பொறி யியல் சேர்க்கையில் சிபிஎஸ்இ மாண வர்களை விட மாநிலக் கல்வியில் பயின்ற மாணவர்கள் முன்னணியில் இருக்கலாம் என்கின்றனர் கல்வியாளர்கள்.
அப்பிபட்டியில் குடியிருப்புகளை அகற்றக் கூடாது தேனி ஆட்சியரிடம் சிபிஎம் வலியுறுத்தல்
அப்பிபட்டியில் குடியிருப்புகளை அகற்றக் கூடாது தேனி ஆட்சியரிடம் சிபிஎம் வலியுறுத்தல் தேனி, மே 8- சின்னமனூர் அருகே அப்பிபட்டி ஊராட்சிகுட்பட்ட முத்துகிருஷ்ணாபுரத்தில் 30 வீடுகளை இடிக்க கொடுக் கப்பட்ட நோட்டீஸை திரும்பப் பெறவேண்டும் என தேனி ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. இது குறித்து கட்சியின் சின்னமனூர் ஒன்றியச்செய லாளர் கே.எஸ்.ஆறுமுகம், ஒன்றியக்குழு உறுப்பினர் எம். பால்பாண்டி ஆகியோர் தலைமையில் தேனி ஆட்சி யரை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், “ தேனி உத்தமபாளையம் தாலுகா அப்பிபட்டி ஊராட்சிக்குட்பட்ட முத்து கிருஷ்ணாபுரத்தில் 30 ஆண்டுகளாக குடியிருந்து வரும் வீடுகளையும் மாட்டுக் கொட்டைகளையும் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அகற்று வதாக ஊராட்சி மன்ற நிர்வாகம் நோட்டீஸ் வாங்கி யுள்ளது. இதை அகற்றக் கூடாது .நீண்ட காலமாக குடி யிருந்து வரும் ஏழைகளுக்கு வகைமாற்றம் செய்து பட்டா வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.