விருதுநகர், அக்.15- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தின் விருதுநகர் - சூலக்கரை கிளைகள் சார்பில் எழுத்தா ளர் ச.தமிழ்ச்செல்வனின் “தமிழ்ச் சிறுகதை யின் தடங்கள்” நூல் வெளியீட்டு விழா நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாநிலத் தலைவர் கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் ஜி.ராஜ கோபால் வரவேற்றார். சங்கத்தின் மதிப் புறு தலைவரும் மதுரை மக்களவை உறுப்பினருமான எழுத்தாளர் சு.வெங்க டேசன் நூலை வெளியிட தொழிலதிபர் வி.வி.எஸ்.யோகன் பெற்றுக் கொண்டார். கவிஞர்கள் சமயவேல், ஷர்மிளா, அ. லட்சுமிகாந்தன், எழுத்தாளர்கள் உதய சங்கர், ம.மணிமாறன், சசிரேகா, கே.சண் முகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியை தேனிவசந்தன் தொகுத்து வழங்கினார். கிளைச் செயலாளர் ஜெ. ராஜன் நன்றி கூறினார். மேலும் இதில் தமு எகச நிர்வாகிகள் ராகுல்காந்தி, சுமதிச் செல்வி, தமிழ்க்கனி ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக கரிசல் குயில் கிருஷ்ணசாமியின் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.